டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வேக்சின் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கான திட்டங்கள் மற்றும் வியூகங்களை பிரதமர் மோடி வகுத்து வருகிறார்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு உலகம் முழுக்க கொரோனா வேக்சின் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 120க்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா வேக்சின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு ஒப்புதல் பெறுவதற்காக முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனமும் தனது ஆய்வின் இடைக்கால முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் வகுத்த பிளான்.. அமெரிக்கா அனுப்பிய தூது.. 2020ல் நடந்த மிகப்பெரிய சர்வதேச அரசியல் மாற்றம்!இஸ்ரேல் வகுத்த பிளான்.. அமெரிக்கா அனுப்பிய தூது.. 2020ல் நடந்த மிகப்பெரிய சர்வதேச அரசியல் மாற்றம்!

எப்படி

எப்படி

ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா உருவாக்கி இருக்கும் கோவிட்ஷீல்ட் வேக்சின் சோதனையின் இடைக்கால முடிவுகள் நேற்று வெளியானது. 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் இடைக்கால முடிவுகளை நேற்று வெளியிட்டனர். இதில் கோவிட்ஷீல்ட் வேக்சின் 70% தடுப்பாற்றல் கொண்டது என்று உறுதி செய்யப்பட்டது.

உயர்த்தலாம்

உயர்த்தலாம்

கோவிட்ஷீல்ட் மருந்தில் ஒரு பெரிய டோஸ் மருந்து அதை தொடர்ந்து ஒரு சின்ன டோஸ் மருந்து கொடுக்கும் போது 90% வரை தடுப்பாற்றலை உயர்த்த முடியும் என்றும் கூறியுள்ளனர். பொதுவாக நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் 50%க்கும் அதிக தடுப்பாற்றல் கொண்டு இருந்தாலே உலக சுகாதார மையம் அதை ஏற்றுக்கொள்ளும். ஆனால் இதன் தடுப்பாற்றல் 70% உள்ளது.

நடக்கும்

நடக்கும்

அதேபோல் 60% தடுப்பாற்றலுக்கு மேல் இருந்தாலே பொதுவாக மருந்துகள் அதிக சக்தி கொண்டு இருக்கும். இதனால் கோவிட்ஷீல்ட் வேக்சின் கண்டிப்பாக நல்ல திறன் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதற்கு பெரிய அளவில் பின் விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நம்பிக்கை கொடுத்துள்ளது.

மோடி ஆலோசனை

மோடி ஆலோசனை

ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனம் கொடுத்த கிரீன் சிகனல் மூலம் இந்திய மத்திய அரசு பெரிய மகிழ்ச்சியில் உள்ளது. ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகாவின் கோவிட்ஷீல்ட் வேக்சின் இந்தியாவில் சீரம் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கும் மருந்தில் 100 மில்லியன் டோஸ் இந்தியாவிற்கு ஜனவரி மாதம் கிடைக்கும்.

கிடைக்கும்

கிடைக்கும்

ஜனவரி பாதியில் இந்த மருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது. சீரம் நிறுவனம் அரசிடம் விற்பனை செய்ய அரசு அதை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்கும். இந்த ஆலோசனை முடிவுகள் மத்திய அரசை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்கள் உடன் வேக்சின் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். மாநிலங்களுக்கு எப்படி வேக்சினை கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

வியூகம்

வியூகம்

ஏற்கனவே மோடி இது தொடர்பாக வல்லுநர் குழுவுடன் ஆலோசனை செய்துவிட்டார். வேக்சினை எப்படி வாங்குவது, அதை எப்படி மக்களுக்கு கொண்டு செல்வது, யாருக்கு முதலில் கொடுப்பது என்று மோடி இந்த முதல் மீட்டிங்கிலேயே ஆலோசனை செய்துவிட்டார். மோடி எடுத்த முடிவுகளை மாநில அரசுகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க இன்றைய கூட்டம் நடக்க உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

அமெரிக்காவில் ஃபைசர் கொரோனா வேக்சின் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்திற்கு அமலுக்கு வந்துவிடும். இதனால் அதே சமயத்தில் இந்தியாவிலும் கொரோனா வேக்சின் விற்பனையை சாத்தியப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டு வருகிறது. இதனால்தான் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

மோடி முக்கியம்

மோடி முக்கியம்

இந்தியா பெரும்பாலும் மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் வேக்சின்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்ட் வேக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவதால் மற்ற நாடுகளுக்கு முன்பாக நமக்கு இந்த மருந்து கிடைக்கும். ஒருவேளை எல்லாம் நன்றாக சென்றால் இன்னும் 40-45 நாட்களில் இந்தியாவில் முதல் நபருக்கு அதிகாரபூர்வமாக கொரோனா வேக்சின் கிடைக்கும்!

English summary
Covid 19: India and PM Modi will plan for big with Oxford's Covidshiled vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X