டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் 63,729 பேருக்கு கொரோனா.. டெல்லியில் புதிய உச்சம்.. உ.பி.யிலும் நிலைமை படு மோசம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,729 பேருக்கு புதிதாக பாதிப்பு உச்சம் தொட்டது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 398 பேர் உயிரிழந்தனர்.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 19,486 பாதிப்புகள் ஏற்பட்டு தினசரி பாதிப்பில் சாதனை படைத்துள்ளது.

காற்று மூலம் கொரோனா மிக வேகமாக பரவுகிறது.. ஆதாரத்துடன் ஷாக் கொடுக்கும் ஆய்வுகள்.. இதை படிங்க!காற்று மூலம் கொரோனா மிக வேகமாக பரவுகிறது.. ஆதாரத்துடன் ஷாக் கொடுக்கும் ஆய்வுகள்.. இதை படிங்க!

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தில் சென்று வருகிறது. நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 2,00,000-ஐ கடந்து விட்டது. பல்வேறு மாநிலங்கள் கொரோனவை விரட்டியடிக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது ஒருபுறமிருக்க கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.கொரோனா பாதிப்பில் நாட்டில் மகாராஷ்டிராதான் முதலிடம் பிடித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா ஆதிக்கம்

மகாராஷ்டிராவில் கொரோனா ஆதிக்கம்

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,729 பேருக்கு புதிதாக பாதிப்பு உச்சம் ஏற்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா மொத்த பாதிப்பு 37,03,584 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 45,335 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 398 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 59,551 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 6,38,034 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் உச்சம்

டெல்லியில் உச்சம்

மகாராஷ்டிராவை போல் தலைநகர் டெல்லியிலும் தினமும் கொரோனா உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 19,486 பாதிப்புகள் ஏற்பட்டு தினசரி பாதிப்பில் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 8,03,623 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மேலும் 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மொத்த உயிரிழப்பு 11,793 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு 11,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பாதிப்பு அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் பாதிப்பு அதிகரிப்பு

இந்த இரு மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்பு அபாய கட்டத்தில் சென்று வருகிறது. இன்று ஒரே நாளில் 27,426 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுளனர். கொரோனா தொற்று காரணமாக 103 பேர் உயிரிழந்தனர். அங்கு கொரோனாவில் இருந்து இதுவரை 6,33,461 பேர் குணமடைந்துள்ளனர். 1,50,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் கொரோனவை கட்டுப்படுத்த வாரத்தில் இறுதி 2 நாட்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் இருப்பவரகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Corona infections are on the rise in Maharashtra, Delhi and Uttar Pradesh in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X