• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு

|

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தனியாக இ பாஸ் பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 4.38 கோடி பேரை பாதித்துள்ளது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 3.22 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Covid 19: Lockdown extension across the country till November 30 - Union Home Ministry

இந்தியாவில் 80 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 7201,070 பேர் குணமடைந்துள்ளனர். 11,9,535பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் இறுதியில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் இருந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களை மீண்டும் படிப்படியாக திறப்பது குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் முடிவு எடுக்கலாம். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான சம்மதத்தின்பேரில், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கலாம். வருகைப்பதிவு கட்டாயம் இல்லை.

பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கிறபோது பின்பற்ற வேண்டிய சுகாதார, பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள் குறித்து மாநிலங்கள் அவர்களாகவே செயல்பாட்டு விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தலாம். பள்ளிகள் அவற்றை கட்டயமாக பின்பற்ற வேண்டும்.

கல்லூரிகளையும், உயர் கல்வி நிறுவனங்களையும் திறப்பது பற்றி நிலைமைக்கேற்ப உயர்கல்வித்துறை, கல்வித்துறை அமைச்சகம் ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். ஆன்லைன், தொலைதூரக்கல்வி முறை தொடரலாம். அவற்றை ஊக்குவிக்கலாம்.

Covid 19: Lockdown extension across the country till November 30 - Union Home Ministry

வீரர்களுக்கு பயிற்சி அளிக் கக்கூடிய நீச்சல் குளங்கள் திறக்கலாம். சினிமா தியேட்டர்கள், பன்னடுக்கு திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ச மூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மத, அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மேற்பட்டோருடன் இவற்றை நடத்த இப்போது அனுமதிக்கப்படுகிறது. மூடப்பட்ட இடங்களில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். அதிகபட்சம் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும்.

முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல், வெப்ப பரிசோதனை செய்தல், கைகழுவும் சானிடைசர் வழங்குதல் கட்டாயம். திறந்தவெளிகளில் நடத்துகிறபோது, தனிமனித இடைவெளி பின்பற்றுவதும், முக கவசம் அணிவதும், வெப்ப பரிசோதனை செய்வதும், கைகழுவும் சானிடைசர் வழங்குவதும் கட்டாயம். இதில் மாநில அரசுகள் செயல்பாட்டு விதிமுறைகளை வழங்கும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளூர் ஊரடங்கை, மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் அமல்படுத்தக்கூடாது. மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்து கட்டுப்பாடு கூடாது. அனுமதி, ஒப்புதல், இ பாஸ் தேவையில்லை.

65 வயதுக்கு மேற்பட்டோர், நாள்பட்ட வியாதிகளை உடையவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அத்தியாவசியமான சூழலிலும், உடல்நல காரணங்களையும் தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம். வீடுகளில் இருக்க வேண்டும்.

பீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியான வழிமுறைகளை மாநில அரசுகள் நீர்த்து போகச்செய்யக்கூடாது.

தனி மனித இடைவெளியை பின்பற்ற செய்வதற்காக குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கலாம்.

கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகள் கொண்டாட பல தடைகள் உள்ள நிலையில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Union Home Ministry said the lockdown would be extended until November 30 to curb the spread of the corona. The federal government has also announced that there is no need to obtain a separate e-pass for inter-state transport. It has been announced that the restrictions issued by the Union Home Ministry on September 30 will continue till November 30.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X