டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வேக்சின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    Modi நடத்திய Meeting! Vaccineக்காக India தீவிரம் | OneIndia Tamil

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, வேக்சினுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் எப்போது கொரோனா வேக்சின் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த சோதனையை செய்து வருகிறது. உலகம் முழுக்க கொரோனா வேக்சினுக்கான சோதனை நடந்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலை, நோவாவேக்சின், சினோவேக்ஸ், ஃபைசர், மாடர்னா, பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது

    Covid 19: PM Modi holds a meeting with think tanks to talk on vaccine strategy

    ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்கள் கொரோனா சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஒப்புதல் பெறுவதற்காக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா வேக்சின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

    மீண்டும் மீண்டும் "ஹு"வில் சேர போகிறோம்.. சீனாவிற்கு வார்னிங் கொடுத்த பிடன்.. அதிரடி பாதையில் அமெரிக்கா?

    நிதி ஆயோக், மருத்துவ குழு, வேக்சின் ஆராய்ச்சி குழு என்று பல்வேறு குழுவுடன் மோடி ஆலோசனை செய்தார். இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, இன்று கொரோனா வேக்சின் தொடர்பாக திட்டமிடுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். வேக்சின் உற்பத்தி, அனுமதி, விற்பனை குறித்து ஆலோசனை செய்தேன்.

    வேக்சின் விநியோகத்தில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது, குளிர் சாதன கிடங்குகளில் பயன்பாடு என்று பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தேன், என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். இந்தியாவில் வேகமாக வேக்சின் பயன்பாட்டை கொண்டு வர பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

    English summary
    Covid 19: PM Modi holds a meeting with think tanks to talk on vaccine strategy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X