டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே துணை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் மத்திய அமைச்சர் சுரேஷ்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே துணை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 65. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார். இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் மத்திய அமைச்சர் ஆவர்.

நாடு முழுவதும் 56 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 45 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா முன்களப்பணியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரையும் கொரோனா தொற்று பாதித்துள்ளது.

Covid 19 : Union Minister of State for Railways Suresh Angadi passes away

மத்திய அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மோஸ் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும் அவர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சுரேஷ் அங்காடி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

கொரோனாவை ஒழிக்க மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் - மோடி வலியுறுத்தல் கொரோனாவை ஒழிக்க மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் - மோடி வலியுறுத்தல்

இந்த நிலையில் சுரேஷ் அங்காடியின் உயிர் பிரிந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார். கடந்த மாதம் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் அங்காடியின் மரணத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Union Minister of State for Railways Suresh Angadi passed away on Wednesday. Earlier this month he was admitted to AIIMS in Delhi after he contracted coronavirus disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X