டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அப்டேட்: இந்தியாவில் 5,28,859 பேரை பற்றிய கொரோனா - 16,095 பேர் மரணம்

இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தாக்கி ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்துள்ளது. இதுவரை 16,095 ப

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவிற்கு 410 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,095 ஆக அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உருவான கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களினால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. ஒரு கோடி பேரை கொரோனா வைரஸ் தொட்டுப்பார்த்துள்ளது. 5 லட்சம் பேரின் உயிரை குடித்துள்ளது என்றாலும் 52 லட்சம் பேர்வரை நோயுடன் எதிர்த்து போராடி கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர்.

COVID-19 Updates: Coronavirus Cases Cross 5,28,859 in india

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்த படியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. இங்கு 5,28,859 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவிற்கு 410 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,095 ஆக அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேக ஜெட்களை கொண்டு வந்த சீனா.. இந்தியா களமிறக்கிய அதிவேக ஜெட்களை கொண்டு வந்த சீனா.. இந்தியா களமிறக்கிய

கடந்த மே மாதம் 18ஆம் தேதி 1லட்சத்து 509 பேர் வரை மட்டுமே கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடந்த 40 நாட்களில் மட்டும் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூன் 31ஆம் தேதி வரை ஆறாம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஜூலை 31ஆம் தேதி வரைக்கும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ குழுவினரின் பரிந்துரையின் பேரில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

English summary
Union Health Ministry said India recorded its biggest surge in the number of coronavirus cases in 24 hours 19,906 new patients, taking the total to 5,28,859 infections.The total number of casualties due to the virus to 16,095.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X