டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்!

இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஸ்வீடன் நாட்டின்ஆஸ்டிரஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து டிசம்பர் இறுதிக்குள் ரெடியாகி விடும் என இந்தியாவின் சீரம் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆட்கொண்டு வரும் கொரோனா தொற்றுக்கு 4.39 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... இவற்றில் 2.97 கோடி மக்கள் நலமாகி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இன்னும் 1.29 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.. இதுவரைக்கும் 11.66 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Covid-19 Vaccine Ready for Rollout by Dec, Says Serum Institute CEO Adar Poonawalla

இந்தியாவின் தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டேதான் செல்கிறது.. மற்றொரு புறம் இறப்பு விகிதமும் அதிகமாகி கொண்டு வருகிறது.. இந்த தொற்றுக்கான தடுப்பூசியை தயாராக்க எண்ணற்ற விஞ்ஞானிகள் அரும்பாடுபட்டு வரும் நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஸ்வீடன் நாட்டின் ஆஸ்டிரஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து டிசம்பர் இறுதிக்குள் ரெடியாகி விடும் என இந்தியாவின் சீரம் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அதேசமயம், இந்த தடுப்பு மருந்தை தயாரிப்பது தொடர்பான தகவல்கள் இங்கிலாந்திலிருந்து வர வேண்டும். அது வந்த பிறகு இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் தயாரிப்பதற்கு ஒப்புதல் தர வேண்டும். அவை நடந்தால்தான் இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தை தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தொடங்க முடியும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாறட்டும்.. அந்த ஆட்சி மாறட்டும்.. அந்த "வீடியோக்கள்" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்

இந்தியாவில் கோவிஷீல்ட் தற்போது இறுதிக் கட்ட மனிதப் பரிசோதனையில் இருந்து வருகிறது... 1600 பேரிடம் இந்த சோதனை நடந்து வருகிறது... சமீபத்தில்தான் வயதானோர் மற்றும் இளைஞர்களிடம் இந்த தடுப்பு மரு்நது நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்திலிருந்து ஆஸ்டிரஜெனகா நிறுவனம் மகிழ்ச்சிகமரான செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மருந்து டிசம்பருக்குள் தயாராகி விடும் எனசீரம் தெரிவித்துள்ளது இந்திய மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது... தேவை ஏற்பட்டால் அவசர அனுமதியை வழங்க மத்திய அரசு தயாராகவே இருப்பாக ஏற்கனவே தெரிவித்துள்ளது... இந்த நிலையில் சீரம் நிறுவனத்தின் பூனாவாலாவின் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்த தடுப்பு மருந்து தயாரிப்பு பணிக்காக பிரத்யேகமாக சீரம் லைப் சைன்ஸ் நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் இந்த சோதனைகளை செய்து வருவது நினைவிருக்கலாம். இங்கிலாந்திலிருந்து வெளியான தகவல் அடிப்படையில் பார்த்தால் விரைவில் நமக்கு தடுப்பு மருந்து கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாகவும் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

English summary
Covid-19 Vaccine Ready for Rollout by Dec, Says Serum Institute CEO Adar Poonawalla
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X