டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைனல் ஸ்டேஜில் களம் இறங்கும் டான்கள்.. தடுப்பூசி விஷயத்தில் இந்தியா டாப் கியர்.. செம்ம சர்ப்ரைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகெங்கிலும் உள்ள முன்னணி கொரோனா சோதனை தடுப்பூசிகளின் 2வது மற்றும மூன்றவாது கட்ட சோதனைகளை மேற்கொள்ள இந்தியா ஒப்புதல் அளித்து வருகிறது. ஏற்கனவே ஆக்ஸ்போர்டு மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளின் 2-3ம் கட்டச சோதனைகள் அடுத்த வார தொடக்கத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கான சோதனைகளையும் இந்தியா தொடங்கும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, உலக நாடுகள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகளை மக்களுக்கு கொடுத்து சோதிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் ஆக்ஸ்போர்டு மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளுடன் தற்போது புதிதாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கான சோதனைகளுக்கும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா ஒப்புதல் அளித்துள்ள மூன்று தடுப்பூசிகளின் நிலை குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் சூப்பர் மாற்றம் இன்று.. கிடுகிடுத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.. குறைந்தது கொரோனா!தமிழகத்தில் சூப்பர் மாற்றம் இன்று.. கிடுகிடுத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.. குறைந்தது கொரோனா!

இங்கிலாந்து தடுப்பூசி

இங்கிலாந்து தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி தான் உலகின் உள்ள தடுப்பூசிகளின் ரேஸில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, அடுத்த வாரம் மனித சோதனைகளின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்க உள்ளது. வணிக ரீதியாக கோவிஷீல்ட் என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் முழுவதும் இரண்டாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது. மூன்றாம் கட்ட சோதனைகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படவிருந்தன. ஆனால் தற்போது தாமதம் ஆகியுள்ளது.

இந்திய தடுப்பூசி

இந்திய தடுப்பூசி

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்கின பாரத் கோவாக்சின், இரண்டாம் கட்ட சோதனைகளை நேற்று (செவ்வாய்) முதல் தொடங்கி உள்ளது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த பாரத் கோவாக்சின் தடுப்பூசி,' மனிதர்களுக்கு பரிசோதிக்கும் மருத்துவ பரிசோதனையான இரண்டாம் கட்டத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்த வருகிறது. இரண்டாம் கட்ட சோதனையை விரைவில் தொடங்க அந்நிறுவனம் விரும்புகிறது.

மனிதர்களுக்கு சோதனை

மனிதர்களுக்கு சோதனை

சோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே ரஷ்ய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்று சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி. அடுத்த மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு சோதனைகளை தொடங்கவுள்ளது. இந்த தகவல் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

ரஷ்யா தடுப்பூசி

ரஷ்யா தடுப்பூசி

ரஷ்ய தடுப்பூசி சோதனைகள் குறித்து பேசிய இந்தியாவின் தடுப்பூசி நிபுணர் குழுவின் தலைவர் வி.கே.பால், "ரஷ்யா அரசு, இந்திய அரசை அணுகி கோவிட் தடுப்பூசி தயாரிப்பதற்கு உதவி கோரியது 3ம் கட்ட ஆய்வுகள் நடத்த முடியுமா? என்று கேட்டது. இந்தியா. ரஷ்யா சிறந்த நண்பர்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. இந்த சோதனையில் சில நிறுவனங்கள் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளன. அவை ரஷ்ய அரசுடன கலந்துரையாடி வருகின்றன. இந்த தடுப்பூசி சோதனை இரு நாடுகளுக்கும் நல்லது.

இந்தியா வசதி செய்து தரும்

இந்தியா வசதி செய்து தரும்

"ஒழுங்குமுறை முன்னணியில், இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளின் தரவுகளைப் பார்த்துள்ளனர். ரஷ்ய தடுப்பூசி இந்திய தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் அனைத்து கடுமையான சோதனை நெறிமுறைகளையும் கடந்து செல்லும். 3 ஆம் கட்ட சோதனைகள் தேவைப்படும். தேவைப்பட்டால், இது இந்திய அரசாங்கத்தால் வசதி செய்து தரப்படும். உற்பத்தி, சோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை வசதிகளுக்காக, நாங்கள் அறிவியல் ரீதியாகவும், நட்புணர்வுடனும் இணைந்து செயல்படுகிறோம்" இவ்வாறு கூறினார்.

அவசரகால பயன்பாடு

அவசரகால பயன்பாடு

இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற பல நாடுகள் ஏற்கனவே கோவிட் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியிருப்பதால், இந்தியா பின்பற்றுமா என்ற கேள்வி உள்ளது. இந்த விஷயத்தில் பேசிய டாக்டர் வி.கே. பால், "ஒரு தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் எந்த நாட்டிற்கு கிடைக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க இன்னும் நேரம் உள்ளது என்றார். இதனிடையே தேவையான சோதனையின்றி மக்களிடையே தடுப்பூசிகளை வெளிப்படையாக பயன்படுத்துவதற்கு விஞ்ஞான சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

English summary
The Health Ministry on Tuesday said that while Phase 2-3 trials for the Oxford and Bharat Biotech vaccine candidates will begin as early as next week, India will also be starting trials for Russia's Sputnik V vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X