டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு: இந்தியாவில் அடுத்த 2 கட்ட மனித பரிசோதனைக்கு டிசிஜிஐ அனுமதி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை இந்தியாவில் இரண்டாவது, மூன்றாம் கட்டமாக மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்க்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்ட

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிஷீல்டு எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் இரண்டாவது, மூன்றாம் கட்டமாக மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்க்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

Recommended Video

    Oxford vaccine மனித உடலில் இப்படி தான் வேலை செய்யும்

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பு மருந்தினை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்தை ஊசி மூலம் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    பிரிட்டனில் ஐந்து இடங்களில் மனிதர்களிடம் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை இரண்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்டத்திலும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

     பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு

    கோவிஷீல்டு மருந்து பரிசோதனை

    கோவிஷீல்டு மருந்து பரிசோதனை

    இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பு மருந்துக்கு ‘கோவிஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் பரிசோதனை

    இந்தியாவில் பரிசோதனை

    இந்தியாவில் கோவிஷீல்டு மருந்தினை மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது.
    இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

    டிசிஜிஐ அமைப்புக்கு கடிதம்

    டிசிஜிஐ அமைப்புக்கு கடிதம்

    ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தினை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) சீரம் இன்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation )சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

    சிடிஎஸ்ஒசி பரிந்துரை

    சிடிஎஸ்ஒசி பரிந்துரை

    அந்த குழு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளுக்கு பின்னர் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தினை 2 மற்றும் 3 ஆம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கும்படி சிடிஎஸ்ஒசி (CDSOC) அமைப்பின் நிபுணர் குழு கடந்த 31 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியது.

    கோவிஷீல்டு பரிசோதனைக்கு அனுமதி

    கோவிஷீல்டு பரிசோதனைக்கு அனுமதி

    இந்நிலையில், சிடிஎஸ்ஒசியின் சிறப்புக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய சிரம் இன்ஸ்டிடியுட்டிற்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தினை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

    மனித பரிசோதனையில் 1600 பேர்

    மனித பரிசோதனையில் 1600 பேர்

    இந்த அனுமதியின் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சோதனை முறையில் 2 மற்றும் 3 ஆம் கட்டமாக செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த மனித பரிசோதனைக்கு இந்தியாவில் 18 வயதை கடந்தவர்கள் 1600 பேர் உட்படுத்தப்படுவார்கள்.

    எங்கெங்கு பரிசோதனை

    எங்கெங்கு பரிசோதனை

    நாட்டின் 17 இடங்களில் டெல்லி எய்ம்ஸ், புனேவில் இருக்கும் பிஜே மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் இருக்கும் ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட், சண்டிகரில் இருக்கும் மருத்துவ முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூர் எய்ம்ஸ், கோரக்பூரில் இருக்கும் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரில் இருக்கும் ஜெஎஸ்எஸ் அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    The DCGI (Drugs Controller General of India) has given nod to the Serum Institute of India to conduct phase 2 and 3 human clinical trials of COVID-19 vaccine Covishield on healthy adults in India the vaccine developed by Oxford University.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X