டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசுக்குதான் கம்மி விலை.. வெளிச் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரேட் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: சீரம் இன்ஸ்ட்டிடியூட் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி ஜனவரி 16ம் தேதி முதல் முன்னுரிமை அடிப்படையில் அரசால் போடப்பட உள்ளது.

இந்த தடுப்பூசிக்கு அரசுக்கு ஒரு விலையும், வெளிச் சந்தைக்கு மற்றொரு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிச் சந்தையில் ஒரு டோஸ் ரூ.1000 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று, ​​சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா தெரிவித்தார்.

கோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம் கோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்

ரூ.200 விலை

ரூ.200 விலை

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பூனாவாலா, "இது ஒரு வரலாற்று தருணம். மத்திய அரசின் கோரிக்கையின் பேரில் 100 மில்லியன் டோஸுக்கு தலா ரூ .200 என்ற சிறப்பு விலையை நிர்ணயித்தோம், பிறகு நாங்கள் அதை தனியார் சந்தைகளில் ரூ .1,000 க்கு விற்பனை செய்வோம்.

100 மில்லியன் டோஸ்

100 மில்லியன் டோஸ்

அரசுக்கு நியாயமான விலையை பராமரிப்போம். எந்த லாபத்தையும் சம்பாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து, முதல் 100 மில்லியன் அளவுகளுக்கு இவ்வளவு குறைந்த விலையில் அரசுக்கு வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்குத்தான் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது.. அரசு மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்யும் உரிமை பெற்றுள்ளதே தவிர வெளிச் சந்தையில் இப்போது விற்பனை நடக்காது.

 பிற தடுப்பூசி விலை

பிற தடுப்பூசி விலை

கோவிஷீல்ட்டின் 11 மில்லியன் தடுப்பூசி அளவு மருந்தை, தலா ரூ .250க்கு வழங்கப்படும் என்று பூனாவாலா முன்பு அறிவித்திருந்தார். இப்போது, ஒரு டோஸுக்கு ரூ.200 என்ற என்ற விலையில் கிடைக்கும் என்று பூனவல்லா தெரிவித்துள்ளார். பூனாவாலா மேலும் கூறுகையில், ஃபைசர்-பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசியை விட சீரம் கோவிஷீல்ட் மலிவானது மற்றும் ஃபைசரின் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது இதை, எடுத்துச் செல்வதும் எளிதானதானது.

 அவசர கால அங்கீகாரம்

அவசர கால அங்கீகாரம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கும், இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஜனவரி 3ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும்.

English summary
As India starts on vaccination, the Serum Institute of India CEO Adar Poonawalla on Tuesday revealed the price of Covishield in private market will be sold at Rs 1,000 per dose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X