டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்!

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி வைத்தது தவறு, அகிலேஷ் தவறு செய்துவிட்டார் என்று சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் எம்.பி முலாயம் சிங் யாதவ் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி வைத்தது தவறு, அகிலேஷ் யாதவ் தவறு செய்துவிட்டார் என்று சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் எம்.பி முலாயம் சிங் யாதவ் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் எம்.பி முலாயம் சிங் யாதவ் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளினார். பிரதமர் மோடி மீண்டும் தேர்தலில் வென்று பிரதமராக வேண்டும் என்று கூறினார்.

அதேபோல் பாஜகவில் எல்லா உறுப்பினர்களும் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது புதிய அணுகுண்டு ஒன்றை தனது கட்சிக்குள்ளேயே தூக்கி வீசியுள்ளார்.

எப்படி முடிந்தது

எப்படி முடிந்தது

முலாயம் சிங் யாதவ் தனது பேட்டியில், சமாஜ்வாதி கட்சியால் எப்படி பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைக்க முடிந்தது. இதை ஏற்கவே முடியவில்லை. ஏன் அகிலேஷ் யாதவ் இந்த முடிவை எடுத்தார். இது தேர்தலில் சமாஜ்வாதிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

யார் அழிப்பது

யார் அழிப்பது

நான்தான் கட்சியை அழிப்பதாக அகிலேஷ் என் மீது குற்றஞ்சாட்டினார். இப்போது கட்சியை நாசம் செய்வது யார் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அகிலேஷின் தவறான நடவடிக்கைகளால் சமாஜ்வாதி கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர்.

பாஜக முன்னிலையில் உள்ளது

பாஜக முன்னிலையில் உள்ளது

பாஜக சமாஜ்வாதியை விட மிக வேகமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆளும் கட்சி என்பதால் அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். அகிலேஷ் ஏன் இன்னும் போட்டியிடும் இடங்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

எதிரி எதிரிதான்

எதிரி எதிரிதான்

உத்தர பிரதேசத்தில் மும்முனை போட்டியெல்லாம் நிகழவில்லை. இங்கு சமாஜ்வாதி - பகுஜன் சமாஜுக்கு இடையில்தான் எப்போதுமே போட்டி. ஆனால் அவர்களுக்கு போய் பாதிக்கு பாதி இடங்களை அகிலேஷ் யாதவ் ஏன் கொடுத்தார், என்று முலாயம் கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
Crack in UP alliance: You did a great mistake, says SB's Mulayam Singh Yadav to Akhilesh Yadav for joining hands with BSP's Mayawati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X