டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3ம் அலைக்கு தயாராக இருங்கள்.. கொரோனா கட்டுப்பாடு குறித்து.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். மூன்றாம் அலை கொரோனா கண்டிப்பாக இந்தியாவை விரைவில் தாக்கும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தார்.

Recommended Video

    Delta + ஆக உருமாற்றம் அடைந்தது Delta வகை Coronavirus.. எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ?

    இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 50 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. பலி எண்ணிக்கையும் 1200க்கு கீழ் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை விரைவில் தாக்கும், அரசு இதற்கு ஏற்றபடி முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கொரோனா.. ராகுல் காந்தி சொன்னதெல்லாம் நடக்கிறதே.. இப்போதும் 2 முக்கிய ஐடியா சொல்கிறார்! ஏற்குமா அரசு?கொரோனா.. ராகுல் காந்தி சொன்னதெல்லாம் நடக்கிறதே.. இப்போதும் 2 முக்கிய ஐடியா சொல்கிறார்! ஏற்குமா அரசு?

    *

    பேட்டி

    பேட்டி

    காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலை மிக மோசமாக இருந்தது. மத்திய அரசு முதல் இரண்டு அலைகளை சரியாக கட்டுப்படுத்தவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மோசமாக இருந்தது. முதல் இரண்டு அலைகளில் நாம் எங்கெல்லாம் தவறு செய்தோமோ அதை எல்லாம் சரி செய்ய வேண்டும்.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    மத்திய அரசை குற்றஞ்சாட்டுவதற்காக வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. 3ம் அலையை கட்டுப்படுத்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும். 3ம் அலை இந்தியாவை தாக்கும் என்பது மொத்த நாட்டிற்கே தெரியும். கொரோனா வைரஸ் வேகமாக உருமாற்றம் அடைந்து வருகிறது.

    கொரோனா

    கொரோனா

    உருமாறும் வைரஸால் 3ம் அலைக்கு பின்பும் புதிய அலை தோன்றலாம். நேற்று இந்தியாவில் அதிக நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது நல்ல விஷயம். துரிதமான பணி நேற்று நடந்துள்ளது. இது தொடர்ச்சியாக நடப்பது இல்லை. ஒருநாள் மட்டுமின்றி தினமும் இதுபோல அதிக நபர்களுக்கு வேக்சின் போட வேண்டும்.

    மூன்றாம் அலை

    மூன்றாம் அலை

    இந்தியாவில் எல்லோருக்கும் வேக்சின் போடும் வரை இதை தொடர வேண்டும். மோடியின் கண்ணீர் மூன்றாம் அலையில் மக்களை காக்காது, ஆனால் ஆக்சிஜனை இப்போதே தயார் நிலையில் வைத்திருப்பது காப்பாற்றும். நான் பேசுவதற்கு பின் அரசியல் இல்லை, இதை அறிவியல் பூர்வமாக அரசு அணுக வேண்டும், என்று ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Cries won't help, Oxygen will help, Says Rahul Gandhi after releasing White Paper on Covid 19 management union government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X