டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எரிபொருள் விலை குறைய வாய்ப்பு.... 50 டாலருக்கும் கீழே சரிந்த கச்சா எண்ணெய் விலை

Google Oneindia Tamil News

டெல்லி: பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழே வீழ்ச்சியடைந்த நிலையில், புதனன்று ஆரம்ப வர்த்தகத்தில் 49.93 டாலர் என்ற விலையை தொட்டது . இது 2017 ஜூலையில் இருந்த விலையை விட குறைவானதாகும்.

கச்சா எண்ணெய் நிலவரப்படி, தினமும் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சில நாட்களாக எரிபொருட்களின் விலை குறைந்து வருகிறது.

இதனால், இந்தியாவின் கூடுதல் எரிபொருள் மானியம் மற்றும் சமீபத்திய மதிப்பீடுகள் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD) என முன்பு கணக்கிடப்பட்டதை விட சில பில்லியன் டாலர்கள் குறைவாக இருக்கிறது.

சந்தை பலவீனம்

சந்தை பலவீனம்

நடப்பாண்டு தொடக்கத்தில், அதிக அமெரிக்க நிதி வட்டி விகிதங்கள், அமெரிக்க-சீன வர்த்தக மோதல்கள் மற்றும் அமெரிக்க பணிநிறுத்தம், முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விருப்பபடாதது என உலகளாவிய வளர்ச்சி குறித்த கவலையை அதிகரித்தது. இதனால், நிதியகச் சந்தையிலும் பலவீனம் ஏற்பட்டது.

மத்திய அரசு வரி விலக்கு

மத்திய அரசு வரி விலக்கு

கடந்த அக்டோபர் 3 ம் தேதி பெட்ரோல் விலை 86.29 ரூபாயாக இருந்தது. இதனையடுத்து, மத்திய அரசு வரி விலக்காக 1.50 ரூபாயை குறைத்தது. மேலும், நுகர்வோருக்கு நிவாரணம் கொடுக்கும் நோக்கில், பொதுத்துறை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல், டீசல் விற்பனையில் ரூ.1 ஐ முதலீடு செய்யத் தொடங்கியது.

மானிய சுமை

மானிய சுமை

சமீபத்தில் எண்ணெய் விலையை கணிசமான குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொண்டு வந்த மசோதாவால் கூடுதலான மானிய சுமை ரூ 11,720 கோடியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொத்த பற்றாக்குறை ரூ. 36,353 கோடியாக உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

முன்னதாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (ஜி.டி.பி.) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதம் ($ 19.1 பில்லியன்) பற்றாக்குறையை கண்டது. இந்த பற்றாக்குறை முந்தைய காலாண்டில் 2.4 சதவீதமாகவும், கடந்த ஆண்டு காலாண்டில் 1.1 சதவீதமாகவும் இருந்தது.

மானியம் உயர வாய்ப்பு

மானியம் உயர வாய்ப்பு

கச்சா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்து வருவதால், டிசம்பர் 25 வரை, உள்நாட்டு சமையல் எரிவாயு மீதான மானியத்தை 27,286 கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசு வழங்க வாய்ப்பு உள்ளது. இது, மொத்த எரிபொருள் மானிய மதிப்பீட்டை (BE) விட 9% அதிகமாகும்.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

2018 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதம் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறையை உந்துகிறது. இந்த நிதியாண்டில் இதுவரை (ஏப்ரல்-அக்டோபர் 2018) வர்த்தக பற்றாக்குறை 113 பில்லியன் டாலராகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட 22 பில்லியன் டாலராகவும் இருந்தது. மேலும், கடந்தாண்டு ஏற்றுமதி 13.06 சதவீதம் இருந்தது, அதனுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில், ஏற்றுமதி வளர்ச்சி 17% சராசரி வளர்ச்சி கண்டுள்ளது.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்துவிட்டால், ஏற்றுமதி வளர்ச்சி மீண்டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏற்றுமதியில் வளர்ச்சி இன்னும் வலுவான நிலையை எட்டவில்லை என கருதப்படுகிறது. கச்சா எண்ணெயின் சீராற்ற நிலையால், உலகளாவிய வர்த்தக வளர்ச்சியில் இருந்து தலைகீழாக எதிர்கொள்ளும் வர்த்தகப் போர்களே அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Brent crude dropped to $ 49.93 a barrel on Wednesday as crude oil prices fell below $ 50
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X