டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜினாமாவில் ராகுல் உறுதி- புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைவர் பதவி வேண்டாம் என திட்டவட்டமாக கூறும் ராகுல்- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். இதனையடுத்து புதிய தலைவர் அல்லது வழிகாட்டுதல் குழு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க ஓரிருநாட்களில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது./

    லோக்சபா தேர்தலில் 52 இடங்களில்தான் வென்றது காங்கிரஸ். இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் பறிகொடுத்தது. அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலேயே தோல்வியும் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தாம் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ஆனால் காரிய கமிட்டிக் கூட்டம் இதனை நிராகரித்தது.

    ராமர் கோவில், ராமர் பாலம்.... காலையிலேயே 'வெள்ளைச்சாமி' பாட ஆரம்பிச்சிட்டாரு ராமர் கோவில், ராமர் பாலம்.... காலையிலேயே 'வெள்ளைச்சாமி' பாட ஆரம்பிச்சிட்டாரு

    ராகுல் உறுதி

    ராகுல் உறுதி

    இருப்பினும் தமது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், அசோக் கெலாட் ஆகியோர் கட்சி தலைமையின் விருப்பத்தை மீறி வாரிசுகளை தேர்தலில் களத்தில் இறக்கியதிலும் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

    சந்திக்க மறுத்த ராகுல்

    சந்திக்க மறுத்த ராகுல்

    இதனால் மூத்த தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம் ராகுல். மேலும் புதிய எம்.பி.க்களும் ராகுலை சந்திக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும் ராகுல் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

    ராகுலுடன் ஆலோசனை

    ராகுலுடன் ஆலோசனை

    இதனிடையே மூத்த தலைவர்களான அகமது படேல் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் நேற்று ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போதும் தமது பதவி விலகல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என ராகுல் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

    புதிய தலைமை

    புதிய தலைமை

    இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் அல்லது கூட்டுத் தலைமையை உருவாக்குவது குறித்து விவாதிக்க விரைவில் அக்கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் கூட உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.

    English summary
    Sources said that the Congress Working Committee will discuss over the the party new chief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X