டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்கிரீன் ஷாட், பாஸ்வேர்டு முதல் அனைத்தையும் கறந்துவிடும்.. கூகுள் குரோம் எக்ஸ்டன்சன்கள்.. கவனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இணையதளத்தை பயன்படுத்துவோர் கூகுள் குரோம் நீட்டிப்புகளை இன்ஸ்டால் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளை, "முக்கியமாக" பயன்படுத்துவோரின் தரவை சேகரிப்பதைக் கண்டறிந்த பின்னர் அவற்றை நீக்கியுள்ளது. இந்த தகவலை நாட்டின் இணைய பாதுகாப்பு நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்த கூகுள் குரோம் நீட்டிப்புகள், வலைத் தேடல்களை மேம்படுத்துவதற்கான கருவிகளாக பார்க்கப்படுகிறது. வீடியோவை டவுன்லோடு செய்வதற்கு உள்பட பல்வேறு விஷயங்களை செய்வதற்காக கூகுள் குரோம் நீட்டிப்புகள் உள்ளன.

சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்திய சைபர் இடத்தைப் பாதுகாப்பதற்கும் தேசிய தொழில்நுட்பக் குழுவான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி-இன்) செயல்படுகிறது. இந்த அமைப்பு பல கூகுள் குரோம் நீட்டிப்புகளில், கூகுள் குரோம் வலை அங்காடி பாதுகாப்பு ஸ்கேன்களைத் தவிர்ப்பதற்கான குறியீடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சைபர் வார்.. இந்தியாவை புதிய வகையில் தாக்க சீனாவின் திட்டம்.. CERTக்கு அனுப்பப்பட்ட வார்னிங்! சைபர் வார்.. இந்தியாவை புதிய வகையில் தாக்க சீனாவின் திட்டம்.. CERTக்கு அனுப்பப்பட்ட வார்னிங்!

பாஸ்வேர்டு போயிடும்

பாஸ்வேர்டு போயிடும்

தீங்கிழைக்கும் அந்த நீட்டிப்புகளால் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்க முடியும். கிளிப்போர்டைப் படிக்க முடியும். அத்துடன் குக்கீஸ் அல்லது பாராமீட்டர்ஸில் சேமிக்கப்பட்ட உங்கள் பாஸ்வேர்டு மற்றும் முக்கியமான தகவல்களை உங்கள் அனுமதி இல்லாமல் தெரிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் கூடும்.

 ஆன்டி வைரஸுக்கு கட்டுப்படாது

ஆன்டி வைரஸுக்கு கட்டுப்படாது

மேலும் தீங்கிழைக்கும் Chrome எக்ஸ்டென்ஷன்கள் பயனர்களை எளிதில் உளவு பார்க்க பாதுகாப்பு ப்ராக்ஸிகள், ஆன்டி-வைரஸ் மற்றும் கூகிள் குரோம் வெப் ஸ்டோர் ஆகியவற்றை கூட எளிதில் புறக்கணிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது

குரோம் வலையில் நீக்கம்

குரோம் வலையில் நீக்கம்

"கூகுள் குரோம் புரவுசரில் அண்மையில் இப்படி திருட்டுத்தனங்களை செய்து வந்த 106 நீட்டிப்புகளை குரோம் வலை அங்காடியிலிருந்து கூகுள் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அப்படி நீட்டிக்கப்பட்ட பல நீட்டிப்புகள் பயனர் தரவை சேகரிப்பதாகக் கண்டறியப்பட்டது" என்று நாட்டின் இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரிசோதியுங்கள்

பரிசோதியுங்கள்

ஐஓசி பிரிவில் கொடுக்கப்பட்ட ஐடிகளுடன் கூகுள் குரோம் நீட்டிப்புகளை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிறுவனம் பயனர்களுக்கு பரிந்துரைத்துள்ளது. உங்கள் குரோம் நீட்டிப்புகள் பக்கத்தைப் பார்வையிடலாம், பின்னர் அவர்கள் ஏதேனும் தீங்கிழைக்கும் நீட்டிப்புகளை நிறுவியிருக்கிறார்களா என்பதைப் பார்க்க டெவலப்பர் பயன்முறையை இயக்கலாம், பின்னர் அவற்றை குரோம் நீட்டிப்பில் இருந்து அகற்றலாம்.

சரியில்லாத இடத்தில் வேண்டாம்

சரியில்லாத இடத்தில் வேண்டாம்

இணைய பயனர்களுக்கு முற்றிலும் தேவைப்படும் நீட்டிப்புகளை மட்டுமே நிறுவவும், அவ்வாறு செய்வதற்கு முன்பு பயனர் மதிப்புரைகளைப் பார்க்கவும் நிறுவனம் அறிவுறுத்தியது.பயன்பாட்டில் இல்லாத நீட்டிப்புகளை அவை நிறுவல் நீக்கம் செய்ய வேண்டும், பயனர்கள் சரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து நீட்டிப்புகளை நிறுவக்கூடாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

English summary
Internet users should exercise caution while installing Google Chrome extensions: Cyber security agency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X