டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா புயல் பாதிப்பு.. இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமி

பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    நிதி கோர இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி- வீடியோ

    புதுடெல்லி: கஜா புயல் பாதிப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.

    கஜா புயல் போய் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. டெல்டா மாவட்ட மக்கள் இன்னமும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏராளமாக ஆகிவிட்டது.

    தமிழக அரசு சார்பில் புயலால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு சம்பந்தமாக முதல்வர் 2 முறை ஆலோசனை கூட்டத்திலும் அதிகாரிகளுடன் ஈடுபட்டார். மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வும் மேற் கொண்டார்.

    கணக்கிடும் பணிகள்

    கணக்கிடும் பணிகள்

    இதைதவிர, எந்தெந்த மாவட்டங்களில் புயலால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்பதை கணக்கிடும் பணிகள் அரசு சார்பாக முடுக்கி விடப்பட்டது. அதனடிப்படையில், புயல் அடித்த மறுநாளே சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகளும் நடந்தன.

    டெல்லி புறப்பட்டார்

    டெல்லி புறப்பட்டார்

    இந்த சேத மதிப்பீட்டு அறிக்கை தயாரானதும் அதை எடுத்து கொண்டு நேற்று மாலை முதல்வர் டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் தங்கியிருந்தாலும், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்பிக்களுடன் திரும்பவும் ஆலோசனை நடத்தினார்.

    நிவாரண நிதியுதவி

    நிவாரண நிதியுதவி

    இதனையடுத்து இன்று காலை பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்து பேச உள்ளார். அப்போது சேத மதிப்பீட்டு அறிக்கையை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தர உள்ளார். பின்னர், கஜா புயல் நிவாரண நிதியும் கோரவுள்ளார்.

    ரூ.13 ஆயிரம் கோடி

    ரூ.13 ஆயிரம் கோடி

    உடனடி நிதியாக மத்திய அரசிடம் ரூ.13 ஆயிரம் கோடி கேட்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புயலால் பாதிக்கக்கப்பட்ட இடங்களை ஆய்வு நடத்த மத்தியக் குழு ஒன்றினையும் தமிழகத்திற்கு அனுப்புமாறு பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Cyclone Gaja: TN CM Edapadi Palanisamy meets PM Narendra Modi today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X