டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாவத் புயல்: வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஸா கடற்கரையை இன்று நெருங்கும்- வானிலை ஆய்வு மையம்

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஸா கடற்கரையை இன்று காலை நெருங்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை பரிந்துரை செய்தது சவுதி அரேபியா.

புயலின் தாக்கம்

புயலின் தாக்கம்

புயலின் தாக்கத்தால் வடகடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களும் ஒடிஸாவின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா உள்ளிட்ட மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து முன்னேறும் புயலானது, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஸா கடற்கரையில் மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவை இன்று காலை நெருங்கும்.

வடகிழக்கு திசை

வடகிழக்கு திசை

இதையடுத்து மீண்டும் வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிஸா மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கரையோரத்தில் நகர்ந்து நாளை மதியம் பூரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக வடகடலோர ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர ஒடிஸாவில் மிக கனமழை பெய்யும்.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

நாளை மழையின் தீவரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிஸாவின் ஜகபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 கி.மீ

100 கி.மீ

இன்றும் நாளையும் அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை மத்திய - வடக்கு வங்கக் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்ட வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும்.

நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

புயலால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிஸா , மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Recommended Video

    சென்னை: மழை நின்றும் தண்ணீர் வடிந்தபாடில்லை… புலம்பும் பொதுமக்கள்!
    நெல்லை

    நெல்லை

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற தெற்கு மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

    English summary
    Cyclone Jawad likely to reach north coastal Andhra and South Odisha today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X