டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலுவிழக்கும் மஹா புயல்.. தீவிர புயலாக மாறும் புல்புல்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எங்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

    டெல்லி: அரபிக் கடலில் உருவான மஹா புயல் வியாழக்கிழமை மாலை வலுவிழந்துவிடும் என்றும் புல் புல் புயலானது அதி தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் அரபிக் கடலில் கியார் புயல் உருவானது. அது ஓமன் நோக்கி நகர்ந்துவிட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் புதிய புயல் உருவானது.

    அதற்கு புல் புல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை பாகிஸ்தான் வைத்துள்ளது. இந்த புயல் ஒடிஸா நோக்கி செல்லும் என கூறப்பட்டது. ஆனால் இது அங்கிருந்து விலகி வங்கதேசத்துக்கு செல்லும் என்றும் கொல்கத்தாவில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அய்யோ அம்மா.. கோயம்பேட்டில் வெங்காய விலை மேலும் ரூ.5 அதிகரிப்பு.. உரிக்காமலே வருது கண்ணீர்அய்யோ அம்மா.. கோயம்பேட்டில் வெங்காய விலை மேலும் ரூ.5 அதிகரிப்பு.. உரிக்காமலே வருது கண்ணீர்

    அரபிக் கடல்

    அரபிக் கடல்

    இந்த நிலையில் இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மஹா புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அது அரபிக்கடலின் மத்திய கிழக்கு பகுதி நோக்கி செல்கிறது.

    அதிக மழை

    அதிக மழை

    அநேகமாக அடுத்த 12 மணி நேரத்தில் அந்த புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழக்கும். இது நாளை மாலை குறைந்த காற்றழுத்தமாக மாறும். இதனால் இன்று குஜராத் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை முதல் மிக அதிக மழை வரை பெய்யக் கூடும்.

    வடக்கு நோக்கி நகரும்

    வடக்கு நோக்கி நகரும்

    டையு, ஜுனாகார், கிர், சோம்நாத், அம்ரேலி, பாவ்நகர், சூரத், பாரூச், ஆனந்த், போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். இதனிடையே புல் புல் புயலானது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    இது வங்கக் கடல் பகுதி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மத்திய கிழக்கில் நிலை கொண்டிருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். இதனால் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.

    வாய்ப்பு குறைவு

    வாய்ப்பு குறைவு

    அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் நிகோபார் பகுதியில் லேசான முதல் குறைந்த அளவிலான மழை பெய்யும். ஒடிஸாவில் மழை பெய்யும். ஒடிஸா கடலோர பகுதியை புயல் தாக்குவதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Cyclone Maha is likely to weaken into low and the New cyclone Bulbul which was named by Pakistan to intensify to severe strom.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X