டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும் நிவர்.. தேசிய பேரிடர் மீட்பு படை

Google Oneindia Tamil News

டெல்லி: புயல் கரையை கடக்கும் நேரம் தாமதமாகி வருகிறது. அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் என். என். பிரதான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புயல் கரையை கடக்கும் நேரம் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Cyclone Nivar may make landfall after 2 am

தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். புதுவையில் 1000 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

நிவர் புயலின் சவாலை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். ஏற்கெனவே நள்ளிரவே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாலை 2 மணி வாக்கில் கடக்கும் தகவல் கிடைத்துள்ளது.

 Cyclone Nivar may make landfall after 2 am

சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் பெரம்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை. தமிழக கடலோர மாவட்டங்களில் நிவாரணப் பணியில் ஐஎன்எஸ் சுமித்ரா, ஜோதி கப்பல்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

English summary
Cyclone Nivar may make landfall after 2 am, says NDRF Director-General SN Pradhan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X