டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய சினிமா துறையின் மிகப்பெரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திரையுலகில் 1970களில் நடிக்க ஆரம்பித்தவர் அமிதாப் பச்சன். இந்தியில் பல படங்களில் நடித்த அமிதாப் பச்சன், தனது நடிப்பால் இந்தி பேசும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Dadasaheb Phalke Award announced to Amitabh Bachchan

100க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ஜன்சீர், தீவார், சோலே, ஆனந்த், திரிசூல், பக்பான், முகதார் கா சிகந்தர், அக்னீபாத், ஷராபி, கபிகுஷி கபிகா,பா, உள்பட பல படங்கள் இந்தியில் பெரும் ஹிட்டடித்தன.

இதனால் இந்தி சினிமா உலகில் வசூல் மன்னாகவும், நடிப்பில் திலகமாகவும் உயர்ந்த அமிதாப் பச்சன் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அமிதாப்பின் நடிப்பு திறமையை பாராட்டி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மராட்டிய மாநில அரசின் விருதுகள் மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகள் பலமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் அமிதாப் பச்சனுக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய சினிமா துறையின் மிகப்பெரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதும் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு (76வயது) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்காக ஒட்டுமொத்த நாடும் உலகச் சமுதாயம் மகிழ்ச்சி அடைந்துள்ளது என்றும் அவருக்கு எனது நல்வாழ்த்துகள் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

English summary
bollywood super star Amitabh Bachchan seleted for Dadasaheb Phalke Award. he is Most Inspiring Legend Of Indian Cinema
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X