டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து குறையும் கொரோனா உயிரிழப்புகள்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிட்-19 காரணமாக இந்தியாவில் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து 300க்கும் கீழாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22,273 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 9,7,40,108 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் குணமடைந்தோரின் வீதம் 95.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரம், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது.

Daily Corona deaths below 300 after over 6 months, 22,273 new cases reported

நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக மூன்று லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் 2,81,667 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 2.77 சதவீதம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 லட்சத்தையும் எட்டியது. அதேபோல நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது.

அடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்புஅடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு

மேலும், செப்டம்பர் 28ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 60 லட்சமாகவும், அக்டோபர் 11ஆம் தேதி 70 லட்சமாகவும் அதிகரித்தது. அதேபோல அக்டோபர் 29ஆம் தேதி 80 லட்சமாக அதிகரித்த வைரஸ் பாதிப்பு, நவம்பர் 20ஆம் தேதி 90 லட்சத்தையும் டிசம்பர் 19ஆம் தேதி ஒரு கோடியையும் தாண்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் 251 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 71 பேரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 31 பேரும், டெல்லியைச் சேர்ந்த 30 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,47,343 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49,129 பேரும், தமிழ்நாட்டில் 12,048 பேரும், கர்நாடகாவில் 12,044 பேரும், டெல்லியில் 10,414 பேரும் கொரோனாவல் உயிரிழந்துள்ளனர்

English summary
India's daily new COVID-19 fatality count was reported below 300 after over six months, taking the death toll to 1,47,343, while the infection tally rose to 1,01,69,118, according to data updated by the Union Health Ministry on Saturday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X