டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட மாநிலங்களில்.. கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் வசதி இல்லை -மத்திய அரசு தரவில் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களில் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் வசதி இல்லை என்று மத்திய அரசு வெளியிட்ட தரவில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி

இந்த கொரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் கல்வி கொடுத்து வருவது ஆன்லைன் வகுப்புகள்தான்.

டிஜிட்டல் வசதி இல்லை

டிஜிட்டல் வசதி இல்லை

இந்த நிலையில் பல மாநிலங்களில் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் வசதி இல்லை என்று மத்திய அரசு வெளியிட்ட தரவில் தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆரம்ப அறிக்கையின்படி பீகாரில் 1.4 கோடி குழந்தைகள் டிஜிட்டல் கற்றல் வசதி சாதனங்களை கொண்டிருக்கவில்லை. ஜார்க்கண்ட்டில் 32.5 லட்சம் குழந்தைகளிடம் டிஜிட்டல் கற்றல் வசதி இல்லை.

கர்நாடகாவும் உள்ளது

கர்நாடகாவும் உள்ளது

இதேபோல் கர்நாடகாவில் 31.3 லட்சம். அசாமில் 31 லட்சம் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் அணுகல் இல்லை. அதே வேளையில் கேரளாவும், ராஜஸ்தானும் இதில் நல்ல நிலையில் உள்ளன. அங்கு அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ளன. இது ஒரு உத்தேச தரவுதான் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது.

தமிழ்நாடு நிலை என்ன?

தமிழ்நாடு நிலை என்ன?

ஏனென்றால் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் இன்னும் தேவையான தரவுகளை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை. பல்வேறு மாநிலங்கள் இன்னும் தரவுகள் கொடுக்காததால் எந்த மாநிலங்களில் மிகப்பெரிய கற்றல் இடைவெளி உள்ளது என்பதை மதிப்பிடுவது கடினமாக இருக்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கற்றல் இடைவெளி

கற்றல் இடைவெளி

இது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே கூறுகையில், கல்வி அமைச்சகம் இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அணுக முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டது. ஆனால் வசதிகள் இல்லாததன் தாக்கத்தையும் அது உருவாக்கிய கற்றல் இடைவெளியையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். அதை மதிப்பீடு செய்ய நாங்கள் அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம்' என்று தெரிவித்த்தார்.

English summary
Data released by the federal government shows that many states in India do not have digital learning facilities for children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X