டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நவீன ஆயுதங்கள்.. குண்டுகள்.. தீவிரவாதிகளுக்கு வீட்டிலேயே இடம் தந்த தாவிந்தர் சிங்.. பரபர பின்னணி!

நேற்று காஷ்மீர் போலீசால் கைது செய்யப்பட ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் தனது வீட்டிலேயே தீவிரவாதிகளை தங்க வைத்து இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று காஷ்மீர் போலீசால் கைது செய்யப்பட ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் தனது வீட்டிலேயே தீவிரவாதிகளை தங்க வைத்து இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

நேற்று காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் ஷோபியன் அருகே போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான், ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை காரில் அழைத்து சென்ற ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.

ஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு ஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு

டெல்லி நோக்கி சென்றார்

டெல்லி நோக்கி சென்றார்

இந்த மூன்று தீவிரவாதிகளையும் தாவிந்தர் சிங் டெல்லி நோக்கி காரில் அழைத்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கிடைத்த உளவுத்தகவலின் படி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இவர்கள் டெல்லியில் மாபெரும் நாசகார வேலைகளுக்கு திட்டம் போட்டு இருந்ததாக தகவல்கள் வருகிறது. போலீசார் இவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் .

சோதனை

சோதனை

இந்த தாவிந்தர் சிங் மீது ஏற்கனவே தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு குற்றஞ்சாட்டி இருந்தார். 2001ல் நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதற்கு தாவிந்தர் சிங் உடந்தை என்று அப்சல் குரு குறிப்பிட்டு இருந்தார். தாவீந்தர் சிங்கிற்கு பல தீவிரவாதிகள் உடன் தொடர்பு இருந்தது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தாவிந்தர் சிங் வீட்டில் இன்று காஷ்மீரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் இருந்தனர்

வீட்டில் இருந்தனர்

இந்த சோதனையில் முடிவில், தாவிந்தர் சிங் வீட்டில்தான் கடந்த இரண்டு நாட்களாக மூன்று தீவிரவாதிகள் தங்கி இருந்தனர் என்பது உறுதியாகி உள்ளது. இந்த வீட்டில் இருந்து நவீன் ரக துப்பாக்கிகள், ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், இரண்டு கை கிடைத்துள்ளது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த வீட்டிற்கு காஷ்மீர் போலீஸ் அதிக அளவில் பாதுகாப்பு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் ராணுவ தளவாடம் ஒன்றும் இந்த வீட்டில் இருந்து 300 மீட்டில் தொலைவில்தான் இருந்துள்ளது. இதனால் தீவிரவாதிகளும் தாவிந்தர் சிங்கும் என்ன திட்டம் தீட்டினார்கள். இதன் பின்புலம் என்று பலரும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

English summary
Cop Davinder Singh kept the terrorists in his home for two days before moving them to Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X