• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுகவிலிருந்து வந்துள்ளேன்.. சும்மா இருக்க மாட்டோம்.. லோக்சபாவில் தயாநிதி மாறன் அடுத்த அதிரடி

|
  தமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள்?.. தயாநிதி மாறன் ஆவேசம்- வீடியோ

  டெல்லி: தமிழக பிரச்சினைகளுக்கு மட்டுமே குரல் கொடுத்து வந்த திமுக எம்பிக்கள் அடுத்தகட்டமாக வட இந்திய கட்சிகளே பேச தயங்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லீம் இளைஞர் மீதான தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்தை கையில் எடுத்துள்ளனர். இது பற்றி பேச லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார் தயாநிதி மாறன்.

  கடந்த 18ம் தேதி, ஜார்கண்டின் செராகேலா கர்சவன் மாவட்டத்தில் 22 வயதான தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை திருடியதாக குற்றம் சாட்டி ஒரு கும்பல் சூழ்ந்து தாக்கியது. கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், ஜூன் 22ம் தேதி, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

  இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  அதிமுகவில் இரட்டை தலைமை ஏன்... இயக்குவது பாஜகவா.. தங்க தமிழ்ச்செல்வன் சொல்வது உண்மையா?

  ஒத்திவைப்பு தீர்மானம்

  ஒத்திவைப்பு தீர்மானம்

  இதனிடையே, இந்த தாக்குதல், மதரீதியாக நடந்தது என்றும், தப்ரேஸ் அன்சாரியை தாக்கியவர்கள், 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'ஜெய் ஹனுமான்' என்று கோஷமிட சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், தப்ரேஸின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, லோக்சபாவில் இன்று, ஒத்திவைப்பு (adjournment motion) தீர்மானத்தீன்கீழ் பேச வேண்டும் என்று மத்திய சென்னை திமுக எம்பியான, தயாநிதி மாறன் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால், இன்று ஒத்திவைப்பு தீர்மானத்தில், இந்த பிரச்சினையை எடுக்க சபாநாயகர் ஒப்புதல் வழங்கவில்லை.

  திங்கள்கிழமையும் புயல் வீசும்

  திங்கள்கிழமையும் புயல் வீசும்

  ஒத்திவைப்பு தீர்மானம் என்பது, பிற அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, விவாதிக்க கூடியதாகும். முக்கியமான விஷயங்களுக்காக இவ்வாறு ஒத்திவைப்பு தீர்மானத்தின்கீழ் பேச சபாநாயர் அனுமதியளிப்பார். ஆனால், ஜார்கண்ட் கும்பல் கொலை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேச அனுமதி கிடைக்காததால், திங்கள்கிழமை, பூஜ்ய நேரத்தில் இந்த விஷயத்தை எழுப்ப தயாநிதி மாறன் திட்டமிட்டுள்ளார். பூஜ்ய நேரம் என்பது, சமீபத்தில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை பற்றி மட்டுமே பேசக்கூடிய நேரமாகும். சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டாலும், இந்த விதியின்கீழ் பேச முடியாது. தமிழில் நேரமற்ற நேரம் என்றும் ஆங்கிலத்தில் Zero hour என்றும் இது அழைக்கப்படுகிறது.

  திமுகவிலிருந்து வந்துள்ளேன்

  திமுகவிலிருந்து வந்துள்ளேன்

  இதனிடையே, பொதுவாக தமிழக பிரச்சினை அதிலும், தொகுதி பிரச்சினையை மட்டுமே பேசக்கூடிய தயாநிதி மாறன், ஜார்கண்ட் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "நாங்கள் அந்த வன்முறை வீடியோவைப் பார்த்தோம். மதத்தின் பெயரால் எவ்வாறு ஒருவர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியும்? நாங்கள் திமுகவிலிருந்து வந்துள்ளோம். நாங்கள் நல்லிணக்கத்தை நம்புகிறவர்கள், மதச்சார்பின்மையை நம்புகிறோம். நாங்கள் அமைதியான மாநிலத்தில் இருந்து வருகிறோம். எனவே எதிர்த்து குரல் கொடுக்க விரும்புகிறோம்" என்றார்.

  முஸ்லீம்கள் இந்தியர்கள் இல்லையா

  முஸ்லீம்கள் இந்தியர்கள் இல்லையா

  தயாநிதி மாறன் மேலும் கூறுகையில், நடப்பதை பார்த்துக்கொண்டு, எங்கள் கட்சி திரும்பி உட்கார்ந்து கொண்டு இதை அனுமதிக்காது என்றும் மாறன் கூறினார். "உயிரைப் பறிக்க யார் இவர்களுக்கு உரிமை கொடுத்தார்கள்? முஸ்லிம்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாக வளர்ந்தோம். போதும்.. போதும். சிறுபான்மையினரை ஏன் குறிவைக்க வேண்டும். என்ன தவறு செய்தார்கள் அவர்கள்? அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக கொல்வீர்களா?" என்று ஆவேசமாக கேட்டார் தயாநிதி மாறன்.

  நடவடிக்கை தேவை

  நடவடிக்கை தேவை

  அனைத்து சமூகங்களும் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். இதுபோன்ற, கும்பல் கொலை சம்பவங்கள் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் அறியப்படவில்லை. இதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இப்போதுதான் இந்த அமைதியின்மை இருக்கிறது. பிரதமர் முன்பு ஒருமுறை, இந்த சம்பவத்தால், தான் வேதனையடைந்ததாகக் கூறினார், ஆனால் வார்த்தைகள் போதவில்லை. எங்களுக்கு நடவடிக்கை தேவை என்று தயாநிதி மாறன் தெரிவித்தார். இந்த கொலை குறித்து வட இந்திய எதிர்க்கட்சிகள் ஏன் எதுவும் பேசவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

  மத்திய அரசுக்கு குடைச்சல்

  மத்திய அரசுக்கு குடைச்சல்

  முன்னதாக லோக்சபாவில் சென்னை குடிநீர் பிரச்சினை குறித்து பேசியபோது, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை, ஊழல் அரசு என தயாநிதி மாறன் விமர்சனம் செய்தார். அப்போது பாஜக எம்பிக்கள், தடுத்தபோதிலும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து உரையை தொடர்ந்தார் தயாநிதிமாறன். மறுநாளே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆவேசமாக பேசினார் மற்றொரு திமுக எம்பியான கனிமொழி. இப்போது ஜார்கண்ட் விவகாரத்தையும் திமுக கையில் எடுத்துள்ளனர். மொத்தத்தில், லோக்சபாவில் மத்திய அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுப்பது திமுக மட்டுமே, என்பதுதான் கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற அலுவல்களை, உன்னிப்பாக, கவனிப்போர் சொல்லும் தகவல்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  DMK MP Dayanidhi Maran on Friday gave an adjournment motion notice in Lok Sabha over alleged lynching of a Muslim man in Jharkhand.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more