டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.. கட்டுப்பாடுகளை தளர்த்திய யெஸ் பேங்க்.. ஆனாலும் தொடரும் சிக்கல்!

யெஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: யெஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    அதிரடி..YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ

    2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து யெஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கைப்பற்றியுள்ளது.

    Debit Card Holders Can Withdraw money from ATM says YES Bank

    வங்கியில் நிலவிய நிறைய முறையற்ற செயல்பாடுகள், முறைகேடுகள் காரணமாக யெஸ் வங்கிக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக எடுக்க முடியாது என்று ஆர்பிஐ கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

    அதிக அளவு கடன்களை அளித்தது, ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பொய்யான கடன் வழங்கியது, வாரா கடன் அதிகம் இருந்தும் லோன்களை திரும்ப பெறாதது, ஆகியவை இந்த வங்கி நிர்வாகம் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு ஆகும்.

    இந்த நிலையில் யெஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுத்தும் கொள்ளலாம்.

    அதிகாலை 3 மணிக்கு அதிரடி.. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூரை கைது செய்தது அமலாக்கத்துறை! அதிகாலை 3 மணிக்கு அதிரடி.. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூரை கைது செய்தது அமலாக்கத்துறை!

    ஆனால் எந்த வங்கி ஏடிஎம்மாக இருந்தாலும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியாது. ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் எடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்பாடு இன்னும் தளர்த்தப்படவில்லை.

    அதே சமயம் யெஸ் பேங்க் ஏடிஎம்களில் எதிலும் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் மக்கள் இன்னும் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆனால் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது. இன்னொரு பக்கம் யெஸ் பேங்க் ஆன்லைன் பண பரிவர்த்தனையும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Debit Card Holders Can Withdraw money from ATM says YES Bank in the late night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X