டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கியில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.. எந்த வங்கி ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்: நிர்மலா

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிட் -19ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி தாக்கலுக்கான கால நீட்டிப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். இதில் வங்கித்துறை சார்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதை பாருங்கள்:

Recommended Video

    பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    உங்கள் டெபிட் கார்டிலிருந்து எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த சலுகை நீடிக்கும். வங்கியில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கும் அபராதம் விதிக்கப்பட மாட்டாது. டிஜிட்டல் வழியில் வணிகம் செய்வோருக்கான வரி குறைக்கப்படும்.

    Debit card holders who withdraw cash from any banks ATM

    இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையில் இருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    English summary
    Debit card holders who withdraw cash from any bank's ATM can do it free of charge for the next 3 months, There shall not be any minimum balance requirement fee, says Union Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X