டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 5 மாநிலங்களில் இருந்து டெல்லி செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கட்டாயமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை முதல் டெல்லிக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சோதனை என்ற சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்ட உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடகா மாநிலம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முந்தைய பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிக் சான்று வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டது.

கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.இதனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது.

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு

.அதுவும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. முதலில் கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெயரை பெற்ற கேரளாவில் தற்போது பாதிப்புகள் அதிகமாக உள்ளன. அங்கு தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் திரிபு வகை கொரோனா தொற்றுகள் உள்ளதாக மத்திய எச்சரித்து உள்ளது.

கர்நாடகா விதித்த கட்டுப்பாடு

கர்நாடகா விதித்த கட்டுப்பாடு

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் அருகே உள்ள மற்ற மாநிலங்கள் கட்டுப்பாட்டை இறுக்கிக் கொண்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வந்தவர்களால் கர்நாடகாவில் கொத்து, கொத்தாக தொற்று பதிவானது. இதனால் உஷார் அடைந்த கர்நாடகா மாநிலம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முந்தைய கொரோனா நெகட்டிக் சான்று வைத்திருக்க வேண்டும் உத்தரவிட்டது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும்

இந்த நிலையில் தலைநகர் டெல்லியும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆயத்தமாகி விட்டது. அதாவது கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து வரும் சனிக்கிழமை முதல் டெல்லிக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சோதனை என்ற சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்ட உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
According to reports, those coming to Delhi from five states - Kerala, Maharashtra, Punjab, Chhattisgarh and Madhya Pradesh - will be required to show a corona negative test certificate from Saturday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X