டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விந்தணு எண்ணிக்கை குறைந்து மலட்டுத்தன்மை.. கொரோனாவால் புதிய சிக்கல்.. உடனே டெஸ்ட் முக்கியம்

Google Oneindia Tamil News

டெல்லி: கண், காது, வயிறு, சிறுநீரகம், கணையம், நெஞ்சு என உடலில் பல்வேறு பாகங்களை பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, கடைசியில் விந்துப்பையையும் பாதிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

Recommended Video

    புதிய Lambda Corona பற்றி தெரியுமா? 29 நாடுகளுக்கு பரவிய New Variant | OneIndia Tamil

    கொரோனா வைரஸ் தொற்று ஆரம்ப காலத்தில் மனிதனின் சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்த மரணத்தை விளைவிக்கும் நோய் என்று மட்டுமே கண்டறியப்ட்டது. ஆனால் உடலின் பல்வேறு பாகங்களில் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருவது அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரியவந்தது.

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. 5 லட்சம் டெபாசிட்.. திட்டத்தை துவங்கி வைத்தார் ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. 5 லட்சம் டெபாசிட்.. திட்டத்தை துவங்கி வைத்தார் ஸ்டாலின்

    அந்த வகையில் ஆண்மை குறைபாடு ஏற்படுத்துவதாக கடந்த ஓராண்டாக பரவலாக பேசப்பட்டும் வந்தது. இந்நிலையில் தற்போது நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில் கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கு இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    மலட்டுத்தன்மை

    மலட்டுத்தன்மை

    இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும் போது, கொரோனா வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். ஆனால் நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விரைவில் தங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    கொரோனாவின் தாக்கம்

    கொரோனாவின் தாக்கம்

    கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை செயல்படுத்தும். விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இதற்கு கொரோனா வைரஸ் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தங்கள் ஆகியவையும் காரணங்கள்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    குறுகிய பாதிப்பு

    குறுகிய பாதிப்பு

    இதனிடையே ஒரு ஆய்வில், கொரோனா குறுகிய காலத்திற்கு மட்டுமே விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 30 சதவீதம் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது பாதிக்கப்படும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தி, எடை பிரச்சனை, உணவு, அடிப்படை சுகாதாரம் உள்ளிட்ட பல காரணிகளை சார்ந்தது என்று கூறப்படுகிறது.

    வீக்கம், வலி

    வீக்கம், வலி

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட ஆண்களில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு டெஸ்டிகுலர் வலி (விதைப்பையில் வலி) இருப்பதும் தெரியவந்துள்ளது. பெரும்பாலானோருக்கு விந்தணுக்களில் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற பிரச்சனையும் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    English summary
    The study found that the corona virus infection, which affects various parts of the body such as the eyes, ears, stomach, kidneys, pancreas and chest, may be eventually affect the sperm. It has been shown to reduce the number of sperm and cause infertility in men.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X