டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கே செல்லும் இந்த பாதை? காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை

Google Oneindia Tamil News

Recommended Video

    காங். நிலைமை குறித்து மூத்த தலைவர்கள் தீவிர கவலை-வீடியோ

    டெல்லி: பழம்பெரும் கட்சியான காங்கிரஸின் தற்போதைய நிலைமை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

    Deep pain, Concern over Cong. party, speaks Salman Khurshid,

    ராகுலின் ராஜினாமாவுக்குப் பிறகு அக்கட்சி முற்று முழுதாக முடங்கிப் போய்விட்ட நிலையில்தான் இருக்கிறது. அண்மையில் சோனியா காந்தியை இடைக்கால தலைவராக காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்தது.

    ஆனாலும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பெயருக்குத்தான் ஆர்வம் காட்டுகிறது காங்கிரஸ் மேலிடம். குறிப்பாக ஹரியானாவில் வெற்றியை பாஜகவுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதில் காங்கிரஸின் கோஷ்டிபூசல் படு தீவிரமாக இருக்கிறது.

    சீனா அதிபர் ஜின்பிங் அக்.11,12-ல் இந்தியா வருகை- வெளியுறவுத் துறை அமைச்சகம்சீனா அதிபர் ஜின்பிங் அக்.11,12-ல் இந்தியா வருகை- வெளியுறவுத் துறை அமைச்சகம்

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சல்மான் குர்ஷித், காங்கிரஸ் கட்சி பழம்பெரும் கட்சி. ஆனால் கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் ஊட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரஸில்தான் நீடிப்போம்.

    நாங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவரும் ஒரு மூத்த தலைவர்தான் என்றார்.

    English summary
    Senior Congress leader Salman Khurshid said that," I have very deep pain and concern about where we are today as a party."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X