டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற ஒரே இந்தியர்! எதிர்த்த மனைவியை வாயடைக்க வைத்த பதில்!

Google Oneindia Tamil News

டெல்லி: மனைவி, நண்பர்கள் என குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி இந்தியர் ஒருவர் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க தன்னார்வலராக இணைந்திருக்கிறார். ஆக்ஸ்போர்டு சோதனையில் பங்கேற்ற ஒரே இந்தியர் தீபக் பலிவால் மட்டும் தான்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கோவிட் -19 தடுப்பூசி சோதனைக்கு தன்னார்வலராக இங்கிலாந்தில் வாழும் இந்திய மருந்து ஆலோசகரான 42 வயதான தீபக் பலிவால் கையெழுத்திட்ட போது, அவரது முடிவை கேட்டு ​​நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீபக் பலிவால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். கடந்த 2010ம் ஆண்டு குடும்பத்துடன் இங்கிலாந்தில் செட்டில் ஆனவர்.

கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்! கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்!

குடும்பம் எதிர்ப்பு

குடும்பம் எதிர்ப்பு

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை குறித்து தீபக் பலிவால் கூறும் போது "எனது முடிவை கேட்டு எனது மனைவி உட்பட எனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சோதனை விலங்காக நீங்கள் மாற வேண்டாம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் அவர்களிடம் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலகிற்கு உதவ நான் செய்ய வேண்டியது இதுதான், இது என் உயிரைப் பணயம் வைத்திருந்தாலும் கூட, அதை நான் செய்வேன்" என்றேன்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

கடந்த ஏப்ரல் 16 ம் தேதி, சோதனைக்குரிய மருந்தை பெற்ற ஒரே இந்திய வம்சாவளி தன்னார்வலரான தீபக் பாலிவால் - 1,000 தன்னார்வலர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து ChAdOx1 n CoV-19 தடுப்பூசியின் அடுத்தடுத்த 2 மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தி கொண்டார். இப்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நல்ல பலனை கொடுத்திருப்பது சோதனைக்கு பின்னர் தெரியவந்துள்ளது. அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிரித்துள்ளது.

எதிர்த்த மனைவி பூரிப்பு

எதிர்த்த மனைவி பூரிப்பு

இன்று பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய தீபக் பலிவால், "தடுப்பூசி தன்னார்வலர்களிடையே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது. இந்த தகவல் வெளிவந்த ஒரு நாள் கழித்து, எனது பங்களிப்பைப் பற்றி பெருமைப்படுவதாக என் மனைவி பேர்ல் டிசோசா சொன்னார்.

பயமுறுத்தினார்கள்

பயமுறுத்தினார்கள்

முன்னதாக தடுப்பூசி விலங்குகளில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டதால் எனக்கு கவலைகள் இருந்தன. குழந்தை பிறப்பு பாதிக்கக்கூடும் என்று மக்கள் என்னை எச்சரித்தனர், மற்றவர்கள் ஆராய்ச்சியாளர்கள் எனது நகர்வுகளைக் கண்காணிக்கும் ஒரு சிப் பொருத்தலாம் என்று கூறினார்கள். இதேபோல் எனது குடும்பத்தினரின் எச்சரிக்கையை தாண்டி, தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகளுக்கு மத்தியில் கொரோனாவால் நான் அதிக பாதிப்புக்குள்ளாக்குவதற்கு சிறிய வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். எனினும் சாதகமான முடிவு வந்துள்ளது " என்றார்.

Recommended Video

    50 சதவிகித vaccine இந்தியாவுக்கு தான்... Serum CEO சூப்பர் அறிவிப்பு

    English summary
    When 42-year-old Deepak Paliwal, a pharma consultant in the UK part of Oxford vaccine trials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X