டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லையில் பதற்றம்.. லடாக் விசிட்டை திடீரென ஒத்திவைத்த அமைச்சர் ராஜ்நாத்சிங்.. பரபரப்பு முடிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் இதை தற்போது அவர் ஒத்திவைத்து இருக்கிறார்.

Recommended Video

    India China Border-க்கு செல்லும் Indian Army Chief பின்னணி | Oneindia Tamil

    லடாக்கின் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்தது. இதனைத் தடுத்த போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    Defence Minister Rajnath Singh to visit Ladakh tomorrow

    இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச விதிகளை மீறி எல்லையில் சீனா தமது படைகளைக் குவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ராணுவ தளபதி நரவனே 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார்.

    அங்கு எல்லை நிலவரங்களை அவர் செய்தார். மேலும் சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களையும் லே மருத்துவமனையில் நரவனே சந்தித்து பேசினார்.

    லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!

    இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் இதை தற்போது அவர் ஒத்திவைத்து இருக்கிறார். இதற்கான முழுமையாக அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    ஆனால் எல்லையில் கல்வான் உள்ளிட்ட இடங்களில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கும் வரை ராஜ்நாத் சிங் எல்லைக்கு செல்ல மாட்டார் என்று கூறுகிறார்கள். அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது அவர் லடாக் செல்வார் என்பது கேள்விகுறியாகி உள்ளது.

    English summary
    Defence Minister Rajnath Singh will visit Ladakh on Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X