டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் எல்லையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவனே நாளை ஆய்வு

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவனே ஆகியோர் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர். இம்மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனாவின் லட்சணம் தெரிந்துவிட்டது.. லடாக் ஆவேச நடவடிக்கையே சாட்சி- அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சுளீர்சீனாவின் லட்சணம் தெரிந்துவிட்டது.. லடாக் ஆவேச நடவடிக்கையே சாட்சி- அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சுளீர்

எல்லையில் பதற்றம்

எல்லையில் பதற்றம்

தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சீனாவின் இந்த தாக்குதல். இதனைத் தொடர்ந்து இந்தியா- சீனா இடையே யுத்த பதற்றம் உருவானது. எல்லையில் இருநாட்டு படைகளும் பெருமளவில் குவிக்கப்பட்டன. பின்னர் இருநாடுகளிடையே பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தொடர் பேச்சுவார்த்தை

தொடர் பேச்சுவார்த்தை

இன்றும் கூட லடாக் எல்லையில் இருநாடுகளிடையேயான கமாண்டர் நிலை பேச்சுவாத்தை நடைபெற்றது. இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லைகளில் இருந்து குவிக்கப்பட்ட படைகளை இருநாடுகளுமே ஏற்கனவே திரும்பப் பெறவும் தொடங்கின.

லடாக்கில் மோடி ஆய்வு

லடாக்கில் மோடி ஆய்வு

இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து மோடி ஆறுதல் கூறினார். அங்கு ராணுவ வீரர்களிடையே எழுச்சிமிக்க உரை நிகழ்த்தினார்

லடாக் பயணம்

லடாக் பயணம்

தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் எல்லையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். அவருடன் ராணுவ தளபதி நரவனேவும் லடாக் எல்லைக்கு செல்கிறார். லடாக் எல்லையில் வரும் 17-ந் தேதி ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் ஜம்மு காஷ்மீரில் எல்லை நிலவரம் குறித்து ஜூலை 18-ல் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகிறார்.

English summary
Defence minister Rajnath Singh will visit Ladakh for a security review on July 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X