டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளைக்கு 2 ஏர் இந்தியா விமானங்கள் லண்டனில் தரையிறங்காது.. தீவிரவாதிகள் பகீர் மிரட்டல்.. ஹைஅலார்ட்

Google Oneindia Tamil News

டெல்லி : இரண்டு ஏர் இந்தியா விமானங்களை நாளை லண்டனை அடைய அனுமதிக்க மாட்டோம் என்று காலிஸ்தான் குழு விடுத்த தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உச்சகட்ட விழிப்புடன் உள்ளது.

டெல்லி காவல்துறையினரின் தகவலின் படி , சீக்கியர்கள் நீதிக்கான காலிஸ்தான் குழு, ஏர் இந்தியா விமானங்களை லண்டனில் தரையிறங்கஅனுமதிக்க மாட்டோம் என அச்சுறுத்தியுள்ளது.

Delhi airport on alert as Khalistani group threatens it wont let 2 Air India flights reach London tomorrow

இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியிடம் பேசிய டெல்லி விமான நிலைய தலைமை அதிகாரி ராஜீவ் ரஞ்சன், "சீக்கியர்களுக்காக நீதிக்குழுவுடன் தொடர்புடைய தீவிரவாதி குருபத்வந்த் சிங் பன்னு, பலருக்கு அச்சுறுத்தல் அழைப்புகளை விடுத்துள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி, இரண்டு ஏர் இந்தியா விமானங்களை லண்டனில் தரையிறங்க அனுமதிக்க மாட்டோம் என மிரட்டி உள்ளார் என்றார்.

அர்ணாப் கைது.. தற்கொலை செய்து அன்வே நாயக்கின் குடும்பத்தினர் எழுப்பிய உருக்கமான கேள்விகள்அர்ணாப் கைது.. தற்கொலை செய்து அன்வே நாயக்கின் குடும்பத்தினர் எழுப்பிய உருக்கமான கேள்விகள்

இந்த தகவல் தொடர்பாக டெல்லி காவல்துறை, விமான நிலைய அதிகாரிகள், ஏர் இந்தியா மற்றும் விமான நிலையத்தை பாதுகாக்கும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் குழு, நவம்பர் 5 தேதியை டில்லியில் 1984ல் நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் 36 வது ஆண்டு நினைவு நாளை அணுசரிக்கிறது. இதையொட்டி மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

English summary
The Delhi airport has been put on alert following a terror threat from a Khalistani group saying it won't allow two Air India flights to reach London tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X