டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துப்பாக்கியுடன் ஆவேசமாக வந்தார்.. போலீஸ் வேடிக்கை பார்த்துச்சு.. அதிர்ச்சியுடன் விவரிக்கும் மாணவி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பக்கிச் சூடு - வீடியோ

    டெல்லி: டெல்லியில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவி ஆம்னா ஆசிப் விவரித்துள்ளார்.

    டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் இன்று போராடிக்கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென கூட்டத்திற்கு வந்தார்.

    delhi armed man fire: student says We tried to approach them to stop that guy, But police just kept standing there simply

    இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவைச் சேர்ந்த சதாப் என்ற மாணவர் காயம் அடைந்தார். இதனால் அப்போது சுற்றியிருந்த மக்கள் அலறி சிதறி ஓடினார். போலீஸ் கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மாணவர் பெயர் சதாம் பாரூக், ஜாமியா பல்கலைக்கழகத்தில் எம்ஏ மாஸ் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் தெரியவந்துள்ளது. அவரது பெயர் ராம்பகத் கோபால் சர்மா என்பது அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஜேவரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கோபால் சர்மாவை கைது செய்த டெல்லி போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு கல்லூரி மாணவி ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு யார் என்றே அடையாம் தெரியாத அந்த மர்ம நபர் ஆவேசத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற போது நாங்கள் தடுப்புகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தோம். அவர் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி ஓடிவந்தார்.

    துறைமுகங்கள், சாலைகள், சுரங்க பாதைகள்..எல்லாம் சரி.. பாலஸ்தீனத்தின் எதிர்காலம் என்னவாகும்?துறைமுகங்கள், சாலைகள், சுரங்க பாதைகள்..எல்லாம் சரி.. பாலஸ்தீனத்தின் எதிர்காலம் என்னவாகும்?

    நாங்கள் அனைவரும் அவரை தடுத்து அமைதிப்படுத்த முயன்றோம். முடியவில்லை. அப்போது காவல் துறையினரை அழைத்து தடுக்குமாறு கூறினோம். ஆனால் அவர்கள் அருகிலேயே அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவரின் கையில் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஒரு மாணவனை அவர் திடீரென சுட்டுவிட்டார்" இவ்வாறு மாணவி ஆம்னாஆசிப் பகீர் சம்பவத்தை விவரித்தார்.

    English summary
    delhi fire: student says We tried to approach them to stop that guy, But police just kept standing there simply. When we tried to take the revolver from his hand, he shot one of our friends
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X