டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் எப்போதுமே ஆபத்தானவர்! ஏன் தெரியுமா

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு இப்போதைக்கு மிக கடினமான ஒரு நபர் என்றால் அது அரவிந்த் கெஜ்ரிவால் தான். நாட்டின் தலைநகரான டெல்லியில் பிப்ரவரியில் நடக்க போகும் சட்டசபை தேர்தல், மோடியின் மேஜிக்கை தவிடுபொடியாக்கிவிடும் என்கிறார்கள் அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் .

ஏனெனில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பழுத்த அரசியல்வாதி இல்லை என்பதற்கு மறுப்பதற்கு இல்லை. இப்போது அவர் முழு அரசியல்வாதியாக தேறிவிட்டார் என்பதே உண்மை.

Recommended Video

    ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம் - வீடியோ

    2014ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த புதிது அந்த சமயம். ஆட்சி அமைக்க தேவையான பலம் இல்லாததால் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்தார். ஆனால் சில நாளிலேயே ஆட்சியை விட்டு விலகினார். அங்கு அப்போது சில காலம் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

    எனக்கு 19 வயதுதான்.... சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த நிர்பயா குற்றவாளிஎனக்கு 19 வயதுதான்.... சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த நிர்பயா குற்றவாளி

    இமாலய வெற்றி

    இமாலய வெற்றி

    முதல்வராக இருந்தபோது லோக்பால் சட்டத்திற்காக இறங்கி வீதியில் இறங்கி கெஜ்ரிவால் போராடினார். அவர் தன்னால் எதையும் போராடி பெற முடியும் என்று டெல்லியின் அத்தனை மக்களிடமும் விதைத்து வைத்து இருந்தார். படித்த மற்றும் நடுத்த மக்கள் அதிகம் உள்ள டெல்லியில் பணம், செல்வாக்கு என பாஜக மற்றும் காங்கிரசின் எந்த ஆயுதமும் செல்லவில்லை. கெஜ்ரிவால் இமாலய வெற்றி பெற்று முதல்வரானார். 67ல் ஆம் ஆத்மியும் 3 இடங்களில் மட்டுமே பாஜகவும் வென்றது. காங்கிரஸ் டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

    நடைமுறை அரசியல்வாதி

    நடைமுறை அரசியல்வாதி

    அப்போது பொதுமக்கள் கெஜ்ரிவாலை மாற்றத்திற்கான தலைவனாக பார்த்து வாக்களித்தனர். ஆனால் ஐந்து ஆண்டுகால அரசியல்வாதி கெஜ்ரிவால் ஒரு நடைமுறைவாத அரசியல்வாதியாக மாறியது வியக்கத்தக்க மாற்றமாகும்.

    தேர்தலில் தோல்வி

    தேர்தலில் தோல்வி

    கெஜ்ரிவாலின் கவர்ச்சி வாக்காளர்களை ஈர்க்கும் தொடர்பை இழந்துவிட்டது என்று யாராவது நினைத்தால், அவர்கள் அரியாமையில் வாழ்கிறார்கள் அர்த்தம் என்கிறார்கள். கெஜ்ரிவால் வாக்காளர்கள் மனதில் டெல்லியில் இன்னும் முதலிடத்தில் இருக்கிறார். அவரது தலைமையின் கீழ், ஆம் ஆத்மி கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் போட்டியிட்ட எந்தவொரு தேர்தலிலும் பரிதாபமாக செயல்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ஒரு சதவீதம்

    ஒரு சதவீதம்

    ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியால் ஒரு சதவீத வாக்குகளை கூட சேகரிக்க முடியவில்லை.

    மோசமாக தோற்றது

    மோசமாக தோற்றது

    டெல்லியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகவும் மோசமாக தோல்வியடைந்தது - வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி 3 வது கட்சியாக இருந்தது. காங்கிரசில் கூட அதிக வாக்குகள் இருந்தன. 2017 டெல்லி நகராட்சித் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி மிகவும் மோசமாக தோற்றது. ஆனால் டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் முற்றிலும் வேறுபட்ட பந்து விளையாட்டு.

    கெஜ்ரிவாலுக்கு

    கெஜ்ரிவாலுக்கு

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவிதியை இந்த மூன்று விஷயங்கள் தீர்மானிக்கும்: ஒன்று, மோடியைப் போலவே, கெஜ்ரிவாலுக்கும் டெல்லியில் போட்டியாளர் இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு தலைவராகவும், மற்றவர்களை விட வலிமையானவராகவும் மோடி காணப்பட்டார். சில காரணிகள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. இதேபோல், டெல்லியில் கெஜ்ரிவாலுக்கும் சில காரணிகள் வேலை செய்கிறது. பாஜக தலைவர் இல்லாதது. மனோஜ் திவாரி, விஜய் கோயல், ஹர்ஷ் வர்தன் மற்றும் பலர் கெஜ்ரிவாலுக்கு பொருந்தவில்லை. அவர்களுக்கு கவர்ச்சி, அந்தஸ்து அல்லது சமூக அடித்தளம் இல்லை.

    ஏழை மக்கள்

    ஏழை மக்கள்

    டெல்லியில், வசதியான மற்றும் உயர் நடுத்தர வர்க்கம் கெஜ்ரிவால் மீது ஏமாற்றமடையக்கூடும், ஆனால் கெஜ்ரிவால் கீழ் நடுத்தர வர்க்கம், ஏழைகள் மற்றும் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் ஆகியோரின் அன்பு மிக அதிகம். பாஜக தலைவர்களைப் போலல்லாமல், அவர் 2017 இல் நடந்த எம்சிடி தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து, டெல்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று பெரிய மற்றும் சிறிய பேரணிகளை தினசரி உரையாற்றி வருகிறார். இதன் மூலம் மக்களிடம் நல்ல இடத்தை பிடித்துவிட்டார்.

    தொண்டர்கள் சோர்வு

    தொண்டர்கள் சோர்வு

    இரண்டாவது, காங்கிரஸ் கட்சியின் பலவீனம். காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அடுத்த படியாக 2வது இடத்தை பிடித்தது. ஆம் ஆத்மி 3வது இடத்தை தான் பிடித்தது. ஆனால் அதன்பிறகு ராகுல் காந்தியின் ராஜினாமா அந்தகட்சியை வெகுவாக பாதித்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். தலைவர் இல்லாமல் செயல்படும் அந்த கட்சியில் ஷூலா தீட்சித்தின் மரணமும் பெரும் பாதிப்பாக மாறியது. காங்கிரஸ் தொண்டர்களின் மனசோர்வு ஆம் ஆத்மிக்கு பலமாகும்.

    80 சதவீத மக்களுக்கு பயன்

    80 சதவீத மக்களுக்கு பயன்

    மூன்றாவதாக, ஆம் ஆத்மி அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியது. தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி அரசாங்கம் பொதுமக்களுக்கு இலவசங்களை பொழிந்துள்ளது. இலவச பேருந்து பயணம், இலவச மின்சாரம் மற்றும் பாதி விலையில் தண்ணீர் ஆகிய திட்டங்கள் கீழ் மற்றும்நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் நேரடியாக பயனளித்துள்ளது. இந்த திட்டம் தில்லி வாக்காளர்களில் 80% பேருக்கு பயனளித்துள்ளது என்று சொல்கிறார்கள். . அரசுப் பள்ளிகளின் செய்த மாற்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு நேர்மறையை உருவாக்கியுள்ளது.

    English summary
    Why Kejriwal Is More Dangerous Than Ever For Modi, The battle for Delhi will further prove that Modi Magic is on the wane despite
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X