டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி சட்டசபை தேர்தல்.. ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கெஜ்ரிவால் புது டெல்லியில் போட்டி!

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியீட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

Delhi Assembly Election: Aam Aadmi releases candidates list, Kejriwal to contest in New Delhi

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. 46 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 70 வேட்பாளர்களில் 12 பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக இளைஞர்களுக்கு ஆம் ஆத்மி இந்த முறை வாய்ப்பு வழங்கி உள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் மனிஷ் சிசோடிய பட்பார்கஞ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது

English summary
Delhi Assembly Election: Aam Aadmi releases candidates list, Arvind Kejriwal to contest in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X