டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் மீண்டும் அரியணை ஏறும் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி 54-60 இடங்களை வெல்லும்.. டைம்ஸ் நவ் கணிப்பு

டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 04-02-2020 | oneindia tamil Morning news

    டெல்லி: டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அங்கு சிஏஏவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நடக்க போகும் சட்டசபை தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது.

    உள்ளே வர கூடாது.. 3500 பேருடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்.. கொரோனாவால் ஜப்பானில் பகீர்! உள்ளே வர கூடாது.. 3500 பேருடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்.. கொரோனாவால் ஜப்பானில் பகீர்!

    நிறைய கணிப்பு

    நிறைய கணிப்பு

    டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் 54 -60இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.அதேபோல் பாஜக கட்சி அங்கு 10-14 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் காங்கிரஸ் 2 இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

    வாக்கு சதவிகிதம்

    வாக்கு சதவிகிதம்

    ஆனால் வாக்கு சதவிகிதம் அடிப்படையில் ஆம் ஆத்மி 52% வாக்குகள் பெறும். பாஜக 34% வாக்குகள் பெறும். 18% வாக்குகள் முன்னிலையில் ஆம் ஆத்மி வெற்றிபெறும். ஆனால் சென்ற தேர்தலை விட இந்த முறை ஆம் ஆத்மி கொஞ்சம் வாக்குகள் குறைவாக பெறும். சென்ற முறையை விட இந்த முறை, ஆம் ஆத்மி 2.5% வாக்குகள் குறைவாக பெறும். மாறாக பாஜக பழம்பெறும். பாஜக 1.7% வாக்குகள் அதிகமாக பெறும்.

    என்ன ஆச்சர்யம்

    என்ன ஆச்சர்யம்

    ஆனால ஆச்சர்யமாக இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி இப்போது லோக்சபா தேர்தல் நடந்தால் தோல்வி அடையும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போது லோக்சபா தேர்தல் நடந்தாலும் அதில் பாஜகதான் வெற்றிபெறும். சென்ற முறை பாஜக அங்கு 7 இடங்களை வென்றது. அதேபோல் பாஜக மீண்டும் 7 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மியை மக்கள் லோக்சபா தேர்தல் வந்தால் ஆதரிப்பது இல்லை என்று இதன் மூலம் புலனாகி உள்ளது.

    வேறு கருத்து கணிப்பு

    வேறு கருத்து கணிப்பு

    அதேபோல் இன்னொரு பக்கம் டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெறும்,. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று ஐஏஎன்எஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் 59 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.அதேபோல் பாஜக கட்சி அங்கு 8 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் காங்கிரஸ் மூன்று இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

    English summary
    Delhi Assembly Election: AAP will win 54-60 seats, BJP 10-14 seats says Times Now opinion poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X