டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த ஒரு நொடி.. இந்திய அரசியலின் மிக முக்கிய தருணம்.. பெண்கள் மத்தியில் உயர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்

நேற்று சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த செயல் ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மனைவிக்கு காதலோடு கேக் ஊட்டிய கெஜ்ரிவால்

    டெல்லி: நேற்று சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த செயல் ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய அரசியலில் மிக முக்கியமான நொடியாக அது பார்க்கப்படுகிறது.

    2015ல் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தேர்வான நேரம். இந்திய அரசியலின் மிக முக்கியமான தருணமாக பார்க்கப்பட்டது. கட்சி தொடங்கி இரண்டே வருடத்தில் ஆட்சியை பிடித்து முதல்வன் பட அர்ஜுன் போல, புதிய பாதை உருவாக்கியவர்தான் கெஜ்ரிவால்.

    2015ல் கெஜ்ரிவால் ஆட்சி பொறுப்பேற்பதற்கு சில மணி நேரம் முன் தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்டார். வீட்டு வாசலில் புகைப்படக்காரர்கள் நிற்க, வெளியே மனைவியுடன் வந்த கெஜ்ரிவால், தன் மனைவியை அன்பாக கட்டி அணைத்தார். முதல்வராகும் முன் மனைவியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்... கெஜ்ரிவாலை கட்டிபிடித்தபடி அங்கு சிரித்துக் கொண்டு இருந்தவர்தான் சுனிதா கெஜ்ரிவால்!

    எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்.. அமித் ஷாவின் வலதுகை.. மோடியின் செல்லம்.. இப்படி தோத்துட்டாரே!எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்.. அமித் ஷாவின் வலதுகை.. மோடியின் செல்லம்.. இப்படி தோத்துட்டாரே!

    இந்திய அரசியல்

    இந்திய அரசியல்

    பொதுவாக இந்திய அரசியலில் பேச்சிலர் என்ற பட்டம் எழுதப்படாத அவசியமான தலைமைப் பண்பாக இருக்கிறது. ராகுல் காந்தி பேச்சிலர், மோடி திருமணம் ஆன பேச்சிலர், அமித் ஷாவின் மனைவி எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அப்துல் கலாம் பேச்சிலர். வாஜ்பாய் பேச்சிலர். இப்படி பேச்சிலராக இருப்பதுதான் தலைவராக தகுதி என்று எழுதப்படாத ஒரு சட்டம் இந்தியாவில் இருக்கிறது. அப்படியே திருமணம் ஆன அரசியல்வாதிகள் கூட , தங்கள் மனைவிகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியது இல்லை.

    அமெரிக்க காதல்

    அமெரிக்க காதல்

    அமெரிக்காவில் எல்லாம் இப்படி கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு பாரக் ஒபாமா - மிச்சல் ஒபாமா ஜோடி, எல்லோருக்கும் பிடித்தமானது. பாரக் ஒபாமா, மிச்சல் இல்லாமல் கலந்து கொண்ட பொது மேடையே கிடையாது. எப்போதும் மனைவியின் கை பிடித்தபடிதான் அவர் சாலையில் நடந்து இருக்கிறார். அமெரிக்காவில் ஒபாமாவிற்கு பெரிய ஆதரவு கிடைக்க இந்த அழகான காதலும், அதன் பின் இருக்கும் சென்டிமென்டும் கூட ஒரு காரணம்தான்.

    பெண்கள்

    பெண்கள்

    ஆனால் இந்திய அரசியலில் இப்படி ஒரு சூழ்நிலை இருந்ததே கிடையாது. ஏன் பெண் அரசியல் தலைவர்களும் தங்கள் கணவன்களை மீடியாவுக்கு காட்டியதே கிடையாது. இந்த பழக்கத்தை வெளிப்படையாக, 2015ல் முதலில் உடைத்தவர்தான் கெஜ்ரிவால். patriarchy எனப்படும் ஆதிக்க சுபாவத்தை உடைத்தார் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. கெஜ்ரிவால் நேற்று தேர்தலில் வென்றதும், முதன் முதலாக செய்தது தனது மனைவிக்கு கேக் வெட்டியதுதான். நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பிறந்த நாள் ஆகும்.

    வீடு

    வீடு

    இதனால் நேற்று வீட்டிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியின் பிறந்த நாளை கொண்டாடினார். மனைவிக்கு மஞ்சள் நிற கேக்கை வெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் காதலோடு வாயில் ஊட்டி விட்டார். அங்கு ஆம் ஆத்மியின் மூத்த உறுப்பினர்கள் பலர் இடம்பெற்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்த நாள் விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி தேர்தல் வெற்றி தனது மனைவிக்கு கிடைத்த பரிசு என்று கூறினார்.

    அலுவலகம்

    அலுவலகம்

    அதன்பின் டெல்லியில் கட்சி அலுவலகம் முன் வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ''டெல்லி மக்களே.. ஐ லவ் யூ'' என்று கூறினார். அதை கேட்டு அங்கு இருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லோரும் ஓ என்று கத்த. கெஜ்ரிவால் சிரித்துக் கொண்டே ''நம்முடைய வெற்றிக்கு ஆம் ஆத்மி தொண்டர்களும், உறுப்பினர்களும், என்னுடைய குடும்பமும் கடுமையாக உழைத்தது. பெரிய ஆதரவு கொடுத்தது. என் மனைவியின் பிறந்த நாள் இன்று. நாங்கள் கேக் சாப்பிட்டோம். உங்களுக்கும் கொடுப்போம்.. எல்லோருக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டார்.

    பாராட்டினார்

    பாராட்டினார்

    கடைசியாக எந்த ஒரு அரசியல்வாதி தன் மனைவியை பொதுவில் கட்டி அணைத்துள்ளார். எந்த ஒரு அரசியல்வாதி தன் மனைவிக்கு பொதுவில் பிறந்த நாள் வாழ்த்து கூறி இருக்கிறார். அட ஏன் எந்த ஒரு அரசியல்வாதி தன் மனைவியை பொதுவில் பாராட்டி இருக்கிறார். இங்குதான் கெஜ்ரிவால் மொத்தமாக மற்ற அரசியல்வாதிகளை தன்னிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டினார். அந்த நொடி, கெஜ்ரிவால் இந்திய அரசியலில் புதிய உயரத்தை தொட்டார்.

    பிரச்சாரம் செய்தார்

    பிரச்சாரம் செய்தார்

    சுனிதா முதல்முதலாக இந்த 2020 சட்டசபை தேர்தலில்தான் பிரச்சாரம் செய்தார். தனது கணவருக்காக வீடு வீடாக பிரச்சாரம் செய்தார். அப்போதே, கெஜ்ரிவால், என்னுடைய மனைவி சுனிதாவிற்கு கூட்டம் என்றால் பயம். கூச்சம். ஆனால் அவர் என் மீது உள்ள காதலால் எதற்கும் பயப்படாமல் களமிறங்கி பிரச்சாரம் செய்கிறார். இந்த அன்புக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன், என்று வெளிப்படையாக கூறினார். அவரின் இந்த பேச்சு மொத்த இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.

    என்ன காதல்

    என்ன காதல்

    சுனிதாவும் கேஜ்ரிவாலும் 25 வருடம் முன் தேசிய அகாடமி டிரெய்னிங்கில் சந்தித்துக் கொண்டவர்கள். அங்கேயே இவர்களுக்குள் காதல். ஐஆர்எஸ்ஸாக இருந்த சுனிதா 2016ல் பதவியை ராஜினாமா செய்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட காதல், இப்போது டெல்லி மக்களுக்கு பேவரைட் காதலாக மாறியுள்ளது. டெல்லியில் மிக அழகான செல்பிரிட்டி ஜோடியாக கெஜ்ரிவால் - சுனிதா ஜோடி மாறி உள்ளது.. ஒரு வேலண்டைன் மாதத்தில் இதை விட வேறு ஒரு சிறந்த பரிசை மனைவிக்கு எந்த ஒரு கணவராலும் கண்டிப்பாக கொடுக்க முடியாது!

    English summary
    Delhi Assembly Election Result: Arvind Kejriwal stood to a new height as he praised his wife in public.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X