டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோலியாத்தை குறி வைத்து வீழ்த்திய தாவீது.. அசரடித்த ஆம் ஆத்மி.. அயர்ந்து போன பாஜக!

பாஜக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: ஆம் ஆத்மி என்ற குட்டிப் பையனை சமாளிக்க முடியாமல் பாஜக திணறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை பாஜகவினர் மத்தியில் எழுப்பியுள்ளது. அமித்ஷாவின் தீவிர வியூகத்திற்கு ஏற்பட்ட சறுக்கலாகவே இது பார்க்கப்படுகிறது.

    ஆரம்பத்திலிருந்தே அமித்ஷாவும், பிரதமர் மோடியும் தொட்டதெல்லாம் துலங்கின. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அது அப்படி சரிய ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்து நடந்த சட்டசபைத் தேர்தல்களில் அமித்ஷாவின் பிளான்கள் தவற ஆரம்பித்தன.

    அமித் ஷா சறுக்க ஆரம்பித்தது இப்போது அல்ல. கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத வகையில் இரு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது.

    ஓவர் கான்பிடன்ஸ்.. வியூக நாயகன் அமித்ஷாவுக்கு என்னாச்சு.. தொடர் தோல்விகள்.. பொசுங்கும் பிளான்கள்!!ஓவர் கான்பிடன்ஸ்.. வியூக நாயகன் அமித்ஷாவுக்கு என்னாச்சு.. தொடர் தோல்விகள்.. பொசுங்கும் பிளான்கள்!!

     ஹரியானா

    ஹரியானா

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அது மட்டுமல்லாமல் சட்டிஸ்கரும் பாஜகவின் கையை விட்டுப் பறிபோனது. இந்தத் தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் 2019ல் மேலும் சரிவைச் சந்தித்தது பாஜக. ஹரியானா சட்டசபைத் தேர்தலில் தோல்வி, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் தோல்வி, அடுத்து மகாராஷ்டிராவில் அதிர்ச்சித் தோல்வி என பாஜகவுக்கு பின்னடைவுகள் பல.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    மகாராஷ்டிராவில் எப்படியும் ஆட்சியமைப்போம் என்று திடமாக பாஜகவினர் நம்பிக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் சேர்ந்து சிவசேனையுடன் இணைந்து நடத்திய அதிரடி நாடகம் பாஜகவினரை அதிர வைத்து விட்டது. இடையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துதான் பாஜகவினருக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் தற்போது 2020ம் ஆண்டிலும் அமித் ஷாவின் வியூகங்கள் தோல்வியைத் தழுவுவது அவர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமான விஷயம்தான்.

     ப. சிதம்பரம்

    ப. சிதம்பரம்

    கடந்த வருடம் தேர்தல் முடிவுகளில் பாஜக சறுக்கியபோது, ப.சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.... "ஹரியானாவில் பொய்த்து போனது. மகாராஷ்டிராவில் மறுக்கப்பட்டது. ஜார்க்கண்டில் தோற்கடிக்கப்பட்டது. இதுதான் 2019-ஆம் ஆண்டில் பாஜகவின் கதை... பாஜக அல்லாத கட்சிகள் தங்களது பார்வைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார். சென்ற வருடம் ப.சி. சொன்னதுதான் இப்போதும் நடந்துள்ளது.. பாஜகவின் பார்வை, அணுகுமுறை, செயல்பாடுகள், வியூகங்கள், சிந்தனைதிறன் இவை எல்லாவற்றையுமே மாற்றிக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திலும், நிர்ப்பந்தத்திலும் உள்ளதாகவே இருக்கிறது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இத்தனைக்கும் எதிர்த்து நிற்க வேண்டிய காங்கிரஸ் மிக மிக பலவீனமாக உள்ளது. ஆட்சி அதிகாரம், சித்தாந்தம் என பல வழிகளிலும் பாஜக பலமாக இருந்தபோதும் கூட.. எத்தனையோ விஷயங்கள் அதற்கு சாதகமாக இருந்தும் கூட... தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இது அமித்ஷாவின் வியூகத் திறமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    English summary
    Delhi Assembly Election Result: BJP is facing a series of electoral defeats
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X