டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்போ சரி.. எப்பவும் விட்டுதர மாட்டேன்.. இந்து, முஸ்லிம் வாக்கு பிரிவினைதான் காரணம்.. அல்கா விரக்தி!

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் அல்கா லம்பா படுதோல்வியை சந்தித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    what happened to congress?

    டெல்லி: "இந்து, முஸ்லிம் வாக்கு பிரிவினைதான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்... இந்த தேர்தல் முடிவை நான் முழுமனதுடன் ஏற்று கொள்கிறேன்... ஆனால், எப்பவும் இதுமாதிரி விட்டுத்தர மாட்டேன்.. இன்றைய போராட்டம் தான் நாளைய வெற்றியை நிர்ணயிக்கிறது" என்று டெல்லி சாந்தினி சௌக் காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர் அல்கா லம்பா.. சாந்தினி சவுக் தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. போன முறை ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்தபிறகு, கெஜ்ரிவாலுக்கு எதிராக இவர் திரும்பினார்.

    அவரது நம்பகத்தன்மை குறித்து கேள்வியும் எழுப்பினார். இதனால் எம்பி தேர்தலுக்கு முன்னாடியே, அவருக்கும் கட்சிக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது... பிறகு அக்கட்சியில் இருந்து விலகியும் விட்டார்.. பிறகு காங்கிரஸில் இணைந்துவிட்டார்.

    முறைப்படி இணைந்தார்

    முறைப்படி இணைந்தார்

    இவருக்கு ஒரு ஹைலைட் என்னவென்றால், ஆம் ஆத்மியில் இணைவதற்கு முன்பாகவே, அதாவது 20 வருஷங்கள் காங்கிரஸில் பல பொறுப்புகளில் இருந்தவர்.. அங்கிருந்துதான் ஆம் ஆத்மிக்கு வந்தார்.. பிறகு திரும்பவும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டார். கடந்த அக்டோபர் மாதம் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    சாந்தினி சவுக்

    சாந்தினி சவுக்

    அல்கா காங்கிரசுக்கு வந்ததும் ஒரு புத்துணர்ச்சியே வந்துவிட்டது போல உணரப்பட்டது.. டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அல்கா நிறுத்தப்பட்டார்... அவரை எதிர்த்து பாஜகவின் சுமன் குப்தா, ஆம் ஆத்மியின் பிரகலாத் சிங் ஆகியோர் போட்டியிட்டனர்... ஆனால், அல்கா லம்பா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். (இவரை போலவே கெஜ்ரிவாலிடம் இருந்து பிரிந்து வந்த கபில் மிஸ்ராவும் தோல்வியைதான் சந்தித்துள்ளார்)

    பின்னடைவு

    பின்னடைவு

    சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா, 1,229 வாக்குகள் மட்டுமே பெற்று 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தோல்விக்கு காரணம், இந்து, முஸ்லிம் வாக்குப் பிரிவினை தான் என்று அல்கா லம்பா தெரிவித்துள்ளார். தன்னுடைய தோல்வி குறித்து அவர் சொன்னதாவது:

    இந்து - முஸ்லிம்

    இந்து - முஸ்லிம்

    "தேர்தல் முடிவை நான் முழுமனதுடன் ஏற்று கொள்கிறேன்... ஆனால், எப்பவும் இதுமாதிரி விட்டுத்தர மாட்டேன்.. இந்த தேர்தலில் இந்து, முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்பட்டன... காங்கிரஸ் தோல்விக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்... இனி வரும் காலங்களில் டெல்லி மக்களின் போராட்டங்களுடன் காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறையை சேர்ந்த புதுமுகங்கள் இணைந்து போராடுவது அவசியம் என்று கருதுகிறேன்.. இன்றைய போராட்டம் தான் நாளைய வெற்றியை நிர்ணயிக்கிறது" என்றார்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    அப்படியானால், டெல்லி போராட்டங்களில் காங்கிரஸ் தனது பங்களிப்பை குறைவாக அளித்திருப்பதாக அல்கா கருதுகிறாரா அல்லது காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களின் எழுச்சி குறைவாக இருப்பதாக உணர்கிறாரா என தெரியவில்லை.. ஆனால் மாற்றம் என்பது இனி காங்கிரசுக்குள்ளிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பதை நிச்சயம் அல்கா நிச்சயம் உணர்ந்திருப்பார்!

    English summary
    Delhi Assembly Election Result: hindu muslim votes were polarised says alka lamba
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X