டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெஜ்ரிவாலுக்கு கிடைச்ச செம வெற்றி.. நல்ல அரசியலுக்கு கிடைத்த வெற்றி.. நச்சுன்னு சொன்ன மக்கள்!

நல்ல அரசியலுக்கு கிடைத்த வெற்றி என தேர்தல் முடிவு குறித்து மக்கள் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: டெல்லி மக்கள் கொடுத்த தீர்ப்புதான் நாடு முழுவதும் இன்று முக்கிய ஹைலைட் பேச்சாக உள்ளது. கெஜ்ரிவாலின் வெற்றியை மக்கள் கொண்டாடுகின்றனர்.

    உண்மையில் ரொம்ப வித்தியாசமானவர்தான் கெஜ்ரிவால். அரசியலுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தவர். சாதாரண அரசு அதிகாரியாக இருந்தவர். சிம்பிளான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். ஆனால் இன்று சாமானிய மக்கள் அனைவருக்கும் மிகப் பெரிய கெளரவத்தைக் கொடுத்துள்ளார்.

    எளிய மக்களுக்காக அவர் ஆரம்பித்த கட்சிதான் ஆம் ஆத்மி. இன்று மக்களின் சக்தியாக அது மாறி நிற்கிறது. அவர் கட்சி ஆரம்பித்தபோது இவரால் என்னசெய்து விட முடியும் என்ற அவ நம்பிக்கைதான் பல கட்சிகளிடம் காணப்பட்டது. இவரை கண்டுக்காமல்தான் இருந்தன பெரிய கட்சிகள் எல்லாம்.

    கெஜ்ரிவால் கையில் எடுத்த கெஜ்ரிவால் கையில் எடுத்த "டீனா".. டிக் அடித்து ஓகே சொன்ன டெல்லி மக்கள்.. பிரமாதம்!

    பாஜக அதிர்ச்சி

    பாஜக அதிர்ச்சி

    ஆனால் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பாஜக, காங்கிரஸ் இருவரையும் அலற விட்டார். காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. பாஜக சற்றே ஷாக் ஆனது. முதல் முறையே முதல்வரும் ஆனார். அவசரப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததால் அடுத்து இவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூட சொன்னார்கள். ஆனால் 2015 தேர்தலில் அவர் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கலங்கிப் போனது. பாஜகவோ பயந்தே போனது.

    மகத்தான வெற்றி

    மகத்தான வெற்றி

    இதோ இப்போது இன்னும் ஒரு ஷாக்கைக் கொடுத்துள்ளார் கெஜ்ரிவால். சற்றும் அதிரடி காட்டாமல் அமைதியாக அவரது கட்சி பெற்ற இந்த வெற்றியானது மிகப் பெரியது, மகத்தானது. இதை வைத்து நமது வாசகர்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தோம். டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்குக் கிடைத்துள்ள வெற்றி? பற்றிக் கூறுங்கள் என்று கேட்டிருந்தோம்.

    ஆதரவு

    ஆதரவு

    அதில், நல்ல அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பெரும்பாலானவர்கள் உரத்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 47.7 சதவீதம் பேர் நல்ல அரசியலுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இது உண்மைதான். யாரையும் அவதூறு பேசாமல், தேவையில்லாத பேச்சுக்களை வெளிப்படுத்தாமல், குற்றம் குறை காணாமல் தான் சொன்னதை, செய்ததை மட்டும் மக்களிடம் கொண்டு சென்று வாக்கு கேட்டவர் கெஜ்ரிவால். அதுதான் நல்ல அரசியல். அதுதான் வென்றுள்ளதாக மக்களும் கூறியுள்ளனர்.

    கூடுதல் வாக்கு

    கூடுதல் வாக்கு

    அடுத்து மக்களின் வெற்றி என்று 24.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதாவது தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக மக்கள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். இந்த வெற்றி நாடு முழுவதும் பரவ வேண்டும் என்று 11.95 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், பாஜகவும் நல்லசீட் வாங்கியிருக்கே என்று 8.41 சதவீதம் பேர் கூறியுள்ளனர். உண்மைதான் கடந்த முறையை விட இந்த முறை 11 சீட் கூடுதலாகவே வாங்கியுள்ளது பாஜக. அதையும் பாராட்டியாக வேண்டும். இதெல்லாம் ஒரு பெரிய வெற்றியில்லை என்றும்7.08 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஒருவேளை இவர்கள் காங்கிரஸ் காரர்களாக இருக்குமோ என்னவோ.

    எப்படியோ கெஜ்ரிவால் சத்தமில்லாமல் சாதித்து விட்டார். அந்த வகையில் அவர் கெட்டிக்காரர்தான்!

    English summary
    Delhi Assembly Election Result: kejriwals success and bjps defeat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X