டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி: 10 பிரதான வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்காக 10 பிரதான வாக்குறுதிகளில் தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

டெல்லி தேர்தலில் பிரசாரமும் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் 10 பிரதான வாக்குறுதிகளுடன் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Delhi Assembly elections 2020: Arvind Kejriwal releases Manifesto

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • டெல்லியில் 200 யூனிட்டுகள் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படாது.
  • வீடுதோறும் 24 மணிநேரமும் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
  • வீடுதோறும் வழங்கப்படும் 20.000 லிட்டர் குடிநீர் திட்டம் தொடர்ந்து நீடிக்கப்படும்.
  • 5 ஆண்டுகளில் 24 மணிநேர மின்விநியோகம் சீராக்கப்படும்.
  • அரசு பள்ளிகளில் தரமான கல்வி உறுதி செய்யப்படும்.
  • மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
  • அரசு பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தரமான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
  • மாசில்லா டெல்லி மாநகரம் உருவாக்கப்படும். தற்போதைய மாசு அளவில் 3 மடங்கு குறைக்கப்படும்.

என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

English summary
Delhi Chief minister Arvind Kejriwal today released Manifesto for the Assembly Elections 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X