டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து மாணவர் மற்றும் இளைஞர் அணி தலைவர்களை காங்கிரஸ் மற்றும் பாஜக களமிறக்கியுள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் அறிவித்துள்ளன.

Delhi assembly Elections 2020: BJP’s Sunil Yadav against Arvind Kejriwal

இம்மூன்று கட்சிகளிலுமே சீட் கிடைக்காதவர்கள் ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். புதுடெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து பாஜகவின் வேட்பாளராக டெல்லி பாஜகவின் இளைஞரணி தலைவர் சுனில் யாதவ் களம் காணுகிறார். வழக்கறிஞரான சுனில் யாதவ், பாஜக மாவட்ட தலைவராகவும் இளைஞரணியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர், இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் போட்டியிடுகிறார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

பாஜக முதல் கட்டமாக 57 வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 20 பேர் புதுமுகங்கள். 4 பெண்கள், 11 பேர் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll

English summary
BJP has fielded Sunil Yadav to fight against chief minister Arvind Kejriwal from the New Delhi constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X