டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி சட்டசபை தேர்தல்: இன்று காலை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. ஜனவரி 21-ந் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Delhi Assembly Elections 2020: Nomination Process begin today

இத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று முதல் வரும் 21-ந் தேதி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 24 கடைசி நாளாகும். பிப்ரவரி 8-ல் பதிவாகும் வாக்குகள் 11-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்க முடியும் என நம்புகிறது. ஆனால் பாஜகவோ ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என முனைப்பு காட்டுகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸும் களத்தில் இருக்கிறது.

English summary
The Nomination Process for the Delhi Assembly Elections to begin today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X