டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி: நாங்க எக்ஸாக்ட் போல் ரிசல்ட்டுக்கு வெயிட்டிங்... பாஜக ஆட்சி அமைக்கும்.. பிரகாஷ் ஜவடேகர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்; டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    Delhi Assembly Elections 2020: We Will wait for exact polls, says Prakash Javadekar

    அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளிலும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. கடந்த 2015 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் காங்கிரஸுக்கு மிக அதிகபட்சமாக 4 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்பு என்றும் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில் டெல்லியின் 7 எம்.பிக்களையும் அழைத்து நேற்று இரவு பாஜக தலைவர் நட்டா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் டெல்லி பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஹர்தீப் சிங் பூரி, நித்தியானந்தா ராய், பாஜக அமைப்பு செயலாளர் சந்தோஷ், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், எக்ஸிட் போல் முடிவுகளுக்கும் இறுதி தேர்தல் முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நாங்கள் இறுதி தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது எக்ஸிட் போல் முடிவுகள் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டன.

    ஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்? ஏப்.14-ல் ரஜினிகாந்த் கட்சி உதயம்... ஆகஸ்ட்டில் மாநாடு- 2 அதிமுக சீனியர்கள் தாவல்?

    எங்களுக்கு களநிலவரம் என்ன என்பது தெரியும். பாஜகவுக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. பிப்ரவரி 11-ந் தேதி டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் என்றார்.

    டெல்லி பாஜக மேலிட பொறுப்பாளர் ஷ்யாம் ஜாஜூ கூறுகையில், கடந்த காலங்களில் எக்ஸிட் போல் முடிவுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. டெல்லி தேர்தலிலும் இறுதி முடிவுகள் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியத்தை தரும் வகையில் இருக்கும் என்றார்.

    பாஜக மூத்த தலைவர் மீனாக்ஷி லெவி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாது. எக்ஸிட் போல் முடிவுகள் என்பது ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 வாக்குச் சாவடிகளில் கருத்து கேட்டு முடிவுகளாக அறிவிக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 13,000 வாக்குச் சாவடிகளில் 0.12% பேரிடம் கருத்து கேட்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றன என கூறியுள்ளார்.

    English summary
    Union minister Prakash Javadekar said on Saturday his party will wait for the exact polls and BJP will come to power in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X