டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவிய பரிதாப பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi assembly elections | BJP lose with small margins

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளில் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கிறது.

    டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி தற்போது ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் கூட முன்னிலை பெறவில்லை.

    Delhi Assembly Elections: BJP lose with small margin in many Constituencies

    கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூடுதலான இடங்களில் முன்னிலை வக்கிறது. இருப்பினும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை விட சில ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர் பாஜக வேட்பாளர்கள்.

    உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? பாஜகவை அவர்களின் ஆயுதத்தை வைத்தே வீழ்த்திய ஆம் ஆத்மி.. எப்படி?உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா? பாஜகவை அவர்களின் ஆயுதத்தை வைத்தே வீழ்த்திய ஆம் ஆத்மி.. எப்படி?

    நரேலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சரத் குமார் 15,537 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 13,166 வாக்குகளுடன் பின் தங்கியுள்ளார். ஆதர்ஷ் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பவன் சர்மா 3959 வாக்குகளையும் பாஜக வேட்பாளர் 2757 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

    பட்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் ஆஜேஷ் யாதவ் 3227 வாக்குகளையும் பாஜகவின் விஜய் குமார் பகத் 3227 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மங்கோல்புரி தொகுதியில் ஆம் ஆத்மியின் ராகி பிர்லா 12948 வாக்குகளையும் பாஜகவின் கரம்சிங் கர்மா 11843 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். ரோகினி தொகுதியில் ஆம் ஆத்மி 9821 வாக்குகளையும் பாஜக 8082 வாக்குகளையும் பெற்றுள்ளன.

    பல்லிமரனில் ஆம் ஆத்மிக்கு 16253 வாக்குகளும் பாஜகவுக்கு 14368 வாக்குகளும் கிடைத்துள்ளன. இப்படித்தான் பல தொகுதிகளின் முன்னிலை நிலவரம் இருக்கிறது.

    English summary
    In Delhi Assembly Elections, BJP lose with small margin in many Constituencies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X