டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டிற்குள் பிணமாக 2 மகள்கள்.. ரயில்வே டிராக்கில் சிதறிய நிலையில் தந்தையின் உடல்.. டெல்லியில் ஷாக்

மகள்களை கொன்று டெல்லி தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

டெல்லி: வீட்டிற்குள் 2 மகள்களும் சடலமாக கிடந்தனர்.. ரயில்வே டிராக்கில் தந்தையின் உடல் சிதறி கிடந்தது.. இந்த இரட்டை கொலை & தற்கொலை சம்பவம்தான் டெல்லியை உறைய வைத்துள்ளது.

டெல்லியின் ஷாலிமார் பகுதியை சேர்ந்தவர் மதுர் மலானி.. 44 வயதாகிறது.. கல்யாணம் ஆகி ரூபாலி என்ற மனைவியும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 14 வயது, இரண்டாவது மகளுக்கு 6 வயதாகிறது!

delhi businessman killed his daughters and committed suicide

மலானி ஒரு தொழிலதிபர்.. காகித தொழிற்சாலையை வைத்திருக்கிறார். ஆனால் கடந்த 6 மாசத்துக்கு முன்பு இந்த ஃபேக்டரி சில காரணங்களால் மூடப்பட்டுவிட்டது.. அதனால் எப்படியாவது ஃபேக்டரியை திறந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். இது ஒன்றுதான் மலானியின் கனவாகவே இருந்தது.

இந்த 6 மாசமும், மலானியின் பெற்றோர்கள்தான் இவரது குடும்பத்தை கவனித்து கொண்டு வந்துள்ளனர்...
இந்நிலையில், இன்று காலை மலானியின் குழந்தைகள் 2 பேரும் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனால் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். சமிக்சா, ஷ்ரேயான்ஸ் இருவருமே சடலமாக கிடந்தனர்.. ஆனால் மலானியை காணவில்லை.

காலையில் மலானி மனைவி ரூபாலி மார்க்கெட்டுக்கு போயிருந்துள்ளார்.. கடைக்கு போய் திரும்பி வருவதற்குள் குழந்தைகள் இறந்து கிடந்தன என்றும், கணவரை தான் வரும்போதே காணவில்லை என்றும் அவர் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து, மலானியை தேடி போலீசார் விரைந்தனர்... அப்போது, ஹெய்டர்பூர் மெட்ரோ ரெயில் நிலையப்பகுதியில் மலானி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

உடல் துண்டாகி ரெயில்வே டிராக்கில் விழுந்து கிடந்தார் மலானி... ஃபேக்டரியை திரும்பவும் திறக்க முடியாத மன உளைச்சலில் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா என தெரியவில்லை.. ஆனால் குழந்தைகளையும் கொன்றது பெருத்த வேதனையை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தைகள் கொலை , மலானியின் தற்கொலைக்கான உண்மை காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.. இதுகுறித்து டெல்லி போலீசாரின் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

English summary
delhi businessman killed his daughters and committed suicide due to loss of bussiness
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X