டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் டிரம்ப்.. சில கிமீ தூரத்தில் கடும் கலவரம்.. அவசர மீட்டிங் போட்ட அமித் ஷா.. திக் நொடிகள்!

டெல்லியில் நேற்று சிஏஏ கலவரம் நடந்து வந்த வேளையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவோடு இரவாக அவசர மீட்டிங் நடத்தினார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நேற்று சிஏஏ கலவரம் நடந்து வந்த வேளையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவோடு இரவாக அவசர மீட்டிங் நடத்தினார்.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    டெல்லியில் நடக்கும் சிஏஏ போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. டெல்லியில் நடந்து வந்த சிஏஏ போராட்டத்தில் நேற்று கலவரம் வெடித்தது. முக்கியமாக வடகிழக்கு டெல்லியில் அதிக அளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

    50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டார்.போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    ஒரு பேச்சு.. அதை தொடர்ந்து வன்முறை.. இரவு முழுக்க பற்றி எரிந்த டெல்லி.. என்ன நடந்தது தலைநகரில்?ஒரு பேச்சு.. அதை தொடர்ந்து வன்முறை.. இரவு முழுக்க பற்றி எரிந்த டெல்லி.. என்ன நடந்தது தலைநகரில்?

    நேற்று எப்படி

    நேற்று எப்படி

    நேற்று இந்த கலவரம் நடந்து கொண்டு இருந்த போது அமெரிக்க அதிபர் டெல்லியில்தான் தங்கி இருந்தார். அவர் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா சாணக்யா ஹோட்டலில் தங்கி இருந்தார். இது டெல்லியில் சாணக்யாபுரியில் அமைந்து இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இருந்த பகுதியில் கலவரம் எதுவும் தற்போது நடக்கவில்லை.

    கலவரம் எப்படி

    கலவரம் எப்படி

    கலவரம் நடக்கும் பகுதியில் இருந்து 15-19 கிமீ தூரத்தில்தான் இந்த ஹோட்டல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பாதுகாப்பு கருதி இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அமெரிக்க அதிபர் வரும் போது டெல்லியில் இப்படி நடக்கும் கலவரம் பெரிய செய்தியானது. உலகம் முழுக்க இது தொடர்பான செய்திகள் பரவ தொடங்கியது.

    கடைகள் எப்படி

    கடைகள் எப்படி

    டெல்லியில் இந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் கடைகள் பல அடித்து உடைக்கப்பட்டு உள்ளது.நேற்று இரவு முழுக்க டெல்லி பற்றி எரிந்தது. டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்தது. அங்கிருக்கும் கடைகள், வீடுகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டது. இதில் 7 பேர் பலியானார்கள். இந்த கலவரத்தில் இன்னும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    டெல்லி கலவரம்

    டெல்லி கலவரம்

    உலகம் முழுக்க டெல்லி கலவரம் முக்கிய செய்தியானது. அதுவரை அமைதியாக இருந்த உள்துறை அமைச்சகத்துக்கு இது பெரிய அழுத்தமாக மாறியது. நேற்று மாலையில் இருந்து கலவரம் நடந்தாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை பெரிதாக கவனிக்கவில்லை. அவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் டெல்லி போலீஸ் இருக்கிறது. ஆனாலும் போராட்டத்தை அவர் கட்டுக்குள் கொண்டு வரவில்லை.

    செய்தி பரவியது

    செய்தி பரவியது

    உலகம் முழுக்க இந்த செய்தி வேகமாக பரவியது. கலவரத்தில் 5 பேர் பலியானார்கள். உயிரை உறைய வைக்கும் நிறைய புகைப்படங்கள் வெளியானது. உலகம் முழுக்க இந்த புகைப்படங்கள் வைரலானது. இதனால் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்துதான் அமித் ஷா நேற்று இரவு டெல்லியில் மீட்டிங் போட்டார். இரவோடு இரவாக அவர் டெல்லியில் 1 மணி நேரம் மீட்டிங் நடத்தினார்.

    போலீஸ் உயர் அதிகாரிகள்

    போலீஸ் உயர் அதிகாரிகள்

    இதில் போலீஸ் உயர் அதிகாரிகள், பாரா மிலிட்டரி அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தை உடனே கட்டுப்படுத்துங்கள். இப்போது அசம்பாவிதம் எதுவும் நடக்க கூடாது. எது நடந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம். உலகமே டெல்லியைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று அமித் ஷா மிகவும் கோபமாக பேசி இருக்கிறார். இந்த ஆலோசனையின் மொத்தம் இரண்டு ரிப்போர்ட்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு ரிப்போர்ட்

    இரண்டு ரிப்போர்ட்

    உளவுத்துறை கொடுத்த போராட்டம் தொடர்பான ரிப்போர்ட்டும், போலீஸ் கொடுத்த கலவரம் தொடர்பான ரிப்போர்ட்டும். இந்த இரண்டையும் அமித் ஷா தீவிரமாக சோதித்து இருக்கிறார். இன்று மீண்டும் உள்துறை அமைச்சகம் சார்பாக ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் இந்த கலவரத்தை மொத்தமாக கட்டுப்படுத்த வேண்டும். அமைதி திரும்ப வேண்டும் என்று போலீஸ் தீவிரமாக முயன்று வருகிறது,

    English summary
    Delhi CAA Riot: Union Minister Amit Shah meets officials amidst violence in the capital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X