டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை

டெல்லியில் கலவரத்தின் போது கொடூரமாக தாக்கப்பட்டு, கை, கால்கள் உடைக்கப்பட்ட முகமது ஸுபைர், அந்த கொடூரமான சம்பவத்தை விளக்கி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கலவரத்தின் போது கொடூரமாக தாக்கப்பட்டு, கை, கால்கள் உடைக்கப்பட்ட முகமது ஸுபைர், அந்த கொடூரமான சம்பவத்தை விளக்கி இருக்கிறார்.

Recommended Video

    Delhi CAA Violence: A Muslim man begged for his life from rioters| உயிருக்கு போராடிய நிலையில் கெஞ்சிய இளைஞர்...

    டெல்லியில் நடக்கும் கலவரத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிக குறி வைத்து தாக்கப்பட்டார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து கொளுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 16க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பலியாகி உள்ளனர்.

    டெல்லியில் நடக்கும் கலவரத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிக குறி வைத்து தாக்கப்பட்டார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து கொளுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 16க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பலியாகி உள்ளனர்.

     நீ இந்துவா? இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்! நீ இந்துவா? இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்!

    எப்படி கடைகள்

    இஸ்லாமிய பெயர்கள் கொண்ட கடைகள் எல்லாம் கொளுத்தப்பட்டது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது.முக்கியமாக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுற்றி நின்று கலவரக்காரர்கள் தாக்கும் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது. ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui.) எடுத்த புகைப்படங்கள் ஆகும் இது. அந்த இளைஞர் தன்னை விட்டு விடுங்கள் என்று உயிருக்கு கெஞ்சிய நேரத்திலும் கூட அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.

    பேட்டி

    பேட்டி

    அவர் ரத்தம் வடிய தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை சுற்றி ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கையில் குச்சியுடன் பலர் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். இந்த கொடூரமான சம்பவத்தை தற்போது தாக்குதலுக்கு உள்ளான நபர் விளக்கி உள்ளார். இவர் பெயர் முகமது ஸுபைர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் டெல்லியில் வசித்து வருகிறார். அந்த கொடூரமான சம்பவத்தை விளக்கிய இவர், நான் அப்போது தொழுதுவிட்டு கடைக்கு சென்று கொண்டு இருந்தேன்.

    உணவு

    உணவு

    என் குழந்தைகளுக்கு உணவு வாங்கி சென்றேன். திடீர் என்று என்னை ஒரு குழு சுற்றி வளைத்தது. என்னை பேச கூட விடவில்லை. எனது தோற்றத்தை பார்த்ததும் என்னை மோசமாக தாக்கினார்கள். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பெயரை சொல்லி சொல்லி தாக்கினார்கள். நான் அவர்களிடம் கெஞ்சினேன். என்னுடைய எலும்புகள் முறிந்தது.

    அழுதேன்

    அழுதேன்

    என்னை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதேன். நான் சுய நினைவை இழக்கும் வரை என்னை தாக்கினார்கள். அதன்பின் எனக்கு எதுவும் நினைவு இல்லை. என் மதத்தை குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அவர்கள் என்னை தாக்கினார்கள். அதன்பின் நான் மருத்துவமனையில்தான் கண் விழித்தேன், என்று முகமது ஸுபைர் தெரிவித்துள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் இவரின் கால், கை எலும்புகள் உடைந்துள்ளது.

    எங்கே இருக்கிறார்

    எங்கே இருக்கிறார்

    இவர் தற்போது பாதுகாப்பிற்காக டெல்லியில் வேறு இடத்தில தங்கி இருக்கிறார். இவரின் குடும்பம் மொத்தமும் உத்தர பிரதேசத்திற்கு சென்றுவிட்டது. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. எல்லோரும் 6 வயதுக்கு குறைவானவர்கள்.எதுவும் செய்யாமல் அமைதியாக சாலையில் சென்று கொண்டு இருந்தவரை மோசமாக தாக்கி, இப்படி முடக்கிப்போட்டுள்ளனர்.

    English summary
    Delhi CAA Violence: The real story behind the viral photo of a Muslim man.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X