டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: போராடத்தின் அடுத்த கட்டமாக டெல்லியின் ஐந்து நுழைவு வாயில்களைளையும் முடக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளார்கள். இயைடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு தனது இல்லத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை அழைத்து 2மணி நேரத்திற்கு மேல் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் போராடி வரும் இடம், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தீவிரமான போராட்டங்கள் குறித்து அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளத.

டெல்லி டெல்லியில் விவசாயிகள் நுழைவு போராட்டம் படுதீவிரம் அடைந்துள்ளது. முதலில் ஹரியான டெல்லி பார்டரில் இருந்து மட்டும் தான் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று முன்தினம் முதல் உத்தரப்பிரதேச நுழைவு வாயில் வழியாகவும் விவசாயிகள் வரத் தொடங்கி உள்ளனர். டெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் சாரசாரையாக ஏராளமான விவசாயிகள் நுழைவதால் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் படுதீவிரம் அடைந்துள்ளது.

 விவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்! விவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்!

உபி விவசாயிகள்

உபி விவசாயிகள்

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்,

பதற்றம்

பதற்றம்

டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப் ஹரியானா மாநில விவசாயிகள் பேரணியாக வந்தவர்களை டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு போலீசார் ஆரம்பத்தில் கடுமையான முயற்சிகள் செய்தா0ர்கள். சாலைகளில் உறுதியான தடுப்புகள் உருவாக்கப்பட்டன ஆனால், விவசாயிகள் சாலைத் தடுப்புகளை அகற்றியபடி வேகமாக முன்னேறினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது..

புராரி மைதானம்

புராரி மைதானம்

ஒரு கட்டத்தில் அவர்கள் டெல்லியில் நுழைவதற்கு மத்திய அரசின் உத்தரவிற்கு பின்னர் போலீசார் அனுமதி அளித்தனர். அவர்கள் கூடுவதற்கு வடக்கு டெல்லியில் புராரி மைதானத்தை ஒதுக்கினர். விவசாயிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, கடும் குளிர், மாசு நிறைந்த காற்றுக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ராம்லீலா மைதானம்

ராம்லீலா மைதானம்

இப்படிப்பட்ட டெல்லியைச் சுற்றியிருக்கும் பல முக்கிய சாலைகள் வழியாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் டெல்லி காவல் துறை, விவசாயிகளை டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள ராம்லீலா மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்தது.. ஆனால் விவசாயிகளோ அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்து போராடி வருகிறார்கள்.

உபி நுழைவு வாயில்

உபி நுழைவு வாயில்

இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளும் டெல்லி சலோ போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி காசியாபாத் நுழைவு வாயிலில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் அந்த சாலையில் பல விவசாயிகள் வரத்தொடங்கி உள்ளனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அழைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்கள், டிசம்பர் 3-க்கு முன்பே அரசோடு விவாதிக்க விரும்பினால், விவசாயிகள், உடனடியாக தங்கள் போராட்டத்தை, அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றிக் கொண்டால் அடுத்த நாளே விவசாய சங்கங்களை அரசு சந்தித்துப் பேசும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் மறுத்துள்ளன. அமித்ஷா எந்த நிபந்தனையும் இன்றி திறந்த மனதுடன் பேச முன் வர வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியனின் பஞ்சாப் தலைவர் ஜக்ஜித் சிங் தெரிவித்தார்.

உணவுடன் வந்த விவசாயிகள்

உணவுடன் வந்த விவசாயிகள்

இதனிடையே விவசாயிகள் மாதக்கணக்கில் வசிக்க தேவையான உணவுடன் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை தொடருவோம். போராட்டத்தில் ஜெயிக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இவ்வளவு உறுதியான போராட்டத்தை தொடர்வதை கண்டு மத்திய அரசு என்ன செய்வது என்று யோசித்து வருகிறது.

அமித்ஷா ஆலோசனை

அமித்ஷா ஆலோசனை

இது ஒருபுறம் எனில் டெல்லியின் ஐந்து நுழைவு வாயில்களான சோனிபட், ரோஹ்தக், ஜெய்ப்பூர், காஜியாபாத்-ஹபூர் மற்றும் மதுரா ஆகிய ஐந்து நுழைவு இடங்களையும் முடக்கப்போவதாக மிரட்டி உள்ளனர். இயைடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு தனது இல்லத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை அழைத்து 2மணி நேரத்திற்கு மேல் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

English summary
Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and Agriculture Minister Narendra Singh Tomar met last night at BJP chief JP Nadda's Delhi house, sources said, hours after the farmers protesting in and around the national capital rejected the centre's proposal of holding early talks and shifting their protest venue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X